நண்பர்களுக்கு,
வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நான் பயணிக்கவிருப்பதால், இந்த தற்காலிக விடுப்பை மேலும் ஒரு மாதமாவது நீட்டிக்குமாறு, தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.
பிரமச்சாரி,
பாலா.
நண்பர்களுக்கு,
வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நான் பயணிக்கவிருப்பதால், இந்த தற்காலிக விடுப்பை மேலும் ஒரு மாதமாவது நீட்டிக்குமாறு, தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.
பிரமச்சாரி,
பாலா.
Posted in திருமணம் | 3 Comments »
ஆணிகள் நிறையாக இருப்பதால் இரண்டு மாதம் விடுப்பு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
பாலா.
Posted in 1 | 3 Comments »
வால்ட் டிஸ்னி மிகவும் கொடுத்து வைத்தவர், ஏனெனில் எப்போது பிடிக்கவில்லை என்றாலும் நடிகர்களை கிழித்து எரிந்து விடுவார்.
- ஆல்ப்ரெட் ஹிட்ச்காக்
பெரும்பாலும் ”மெக்குஃபின்” யுக்தியை தனது திரைபடங்களில் பயன்படுத்தி, அதை பிரபலப்படுத்தியவர் ஹிட்ச்காக்.
McGuffin (மெக்குஃபின்) என்றால் என்ன?
பார்வையாளரை ஈர்க்க/கட்டிபோட, கதையின் போக்கை நகர்த்தக்கூடிய இருக்கும்/இல்லாத ஒரு பொருளோ/விஷயமே மெக்குஃபின் ஆகும்.கதையின் பாத்திரங்கள் அதை சுற்றியே/நாடியே ஓடிக்கொண்டு இருப்பார்கள். உளவாளிகள் பற்றிய படத்தில் அத்தியாவசியமாக இருக்கும் இந்த மெக்குஃபின், ஒரு நாட்டின் ராணுவ ரகசியமாகவோ/அரசாங்க ரகசியமாகவோ , ஒரு சின்ன மைக்ரோ பிலிம்மாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
சமீபத்திய உதாரணம் “தசாவதாரம்” படத்தில் கமல்(கள்) துரத்தும் வயல் (phial).
ஏன், நமக்கு வரும் பரிசு பொருள்கள் கூட ஒரு மெக்குஃபின் தான். உள்ளே இருக்கும் பரிசு பொருளை விட அதை நாம் தபால்காரரிடம் காத்திருந்து பெற்று, அந்த தபாலை பிரிக்கும் அந்த விறுவிறுப்பும் குறுகுறுப்பும் அந்த பரிசு பொருளை விடவும் அதிகம் தானே?
இனி இந்த யுக்தியை கொண்டு அவர் இயக்கிய திரை வரிசையை பாப்போம்.

ஹிட்ச்காக் இயக்கிய கருப்பு வெள்ளை திரைப்படம்.இந்த படம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது என்றால் அது மிகையில்லை.
அரிசோனா மாகாணத்தில் வாழும் மேரியானுக்கு, (Janet leigh) தன் காதலன் சாமை (John Gavin) மணந்து கொள்வதில் ஒரு பிரச்சனை! அவனுடைய முன்னால் மனைவிக்கு திருப்பிதர வேண்டிய கடனும், ஜீவனாம்சமாக பெருந்தொகையும் (நமது நாட்டில் உள்ளதை போல ஐந்நூறு,ஆயிரமல்ல வருமானத்தில் சரி பாதி) கொடுக்க நிதிநிலை சரியில்லாதது.இதற்க்காக தான் வேலை பார்க்கும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஒரு வாடிக்கையாளருக்கு கொடுக்கவேண்டிய 40,000 டாலரை எடுத்து கொண்டு(திருடிக்கொண்டு) தன் காதலனை தேடி கலிபோர்னியா விரைகிறாள்.
பதட்டத்துடன் செல்லும் அவள் நெடுநேர பயணக்களிப்பில் நெடுஞ்சாலையிலேயே தூங்கி விடுகிறாள். நடு நசியில் தூங்கிக்கொண்டிருப்பவளை ஒரு காவல் அதிகாரி எழுப்பி இவ்வாறு செய்யக்கூடாதென்றும், வழியில் உள்ள ஏதோனும் மோட்டலில் தங்குமாறு அறிவுறுத்துகிறார். பின் அவளது நடவடிக்கை சர்ச்சை அளிக்கவே தொடரவும் செய்கிறார். இதனால் பதட்டமடைந்த மேரியான், இந்த காரை விற்று வேறு புதிய கார் வாங்கி தன் பயணத்தை தொடர்கிறாள். அங்கும் அந்த போலீஸ் அதிகாரி வர, நெடுஞ்சாலையில் இருந்து விலகி வேறொரு பாதையில் செல்கிறாள். அங்கு தனிமையில் ஆள் அரவமற்று, அமானுஷ்யமாக காட்சியளிக்கிற ஒரு வீடும் அதை ஒட்டியே ஒரு மோட்டல் இருப்பதையும் காண்கிறாள். மழை வேறு பெய்து கொண்டு இருப்பதால் வழி இல்லாமல், யோசனைக்கு பின் அங்கு தங்க முடிவெடுக்கிறாள்.
அந்த விடுதியின் முதலாளி நார்மன் (Antony Perkins), அங்கு புதிதாக ஒரு புறவழிச்சாலை போடப்பட்டதால் தன் விடுதிக்கு வாடிக்கையாளர்கள் வருவது கணிசமாக குறைந்து விட்டதாகவும், இங்கு தனது தாயாருடன் வசிப்பதாகவும் கூறுகிறான். வெளியே மழை பெய்து கொண்டு இருப்பதால் தானே இரவு உணவு கொடுப்பதாகவும் வீட்டுக்கு சொல்கிறான்.
அங்கு நார்மனும் அவனது தாயாரும் சண்டையிடுவதையும், அவர் சற்று மனநிலை சரியில்லாதவர் போல கத்துவதும், மேரியான் பற்றி தரகுறைவாக பேசுவதையும் கேட்க நேரிடுகிறது. பின் உணவருந்தும் போது அதை பற்றி விவாதிக்கையில் பிதற்றிக்கொண்டு இருக்கும் நார்மனின் தாயாரை ஒரு காப்பகத்தில் சேர்க்க அறிவுறுத்துகிறாள். கோபப்பட்ட நார்மன் தனது தாயார்தான் தனக்கு உற்ற தோழி எனவும், எல்லா ஆண்களுக்கும் இது பொருந்தும் எனக்கூறுகிறான்.
உணவருந்திய பின் தனது அறைக்கு வந்த இரவு உடைக்கு மாறுகிறாள். அவள் ஆடை மாற்றுவதை பக்கத்து அறையின் ஒரு துவாரம் வழியாக நார்மன் பார்க்கிறான். சிறுது நேரத்தில் வீட்டுக்கு சென்று விடுகிறான்.மேரியான் செலவு கணக்கை பார்த்து விட்டு அங்கிருக்கும் ஒரு செய்தித்தாளில் பணத்தை சுற்றி வைத்துவிட்டு பிறகு குளிப்பதற்காக செல்கிறாள்..
மேரியான் குளியல் அறையில் குளித்துக்கொண்டு இருக்கிறாள்.அப்போது திரைசீலைக்கு பின் ஒரு பெண்ணின் உருவம் மெதுவாக கதவை திறந்து உள்ளே வருகிறது. பிறகு கூர்மையான் கத்தியால் பலமுறை பாய்ச்சி கொல்கிறது. திரைசீலையை பிடித்த படி அங்கேயே விழுந்து மடிகிறாள் மேரியான். சற்றைக்கெல்லாம் நார்மன் தனது தாயாரை கடிந்து கொள்ளும் குரல் கேட்கிறது. வந்து பார்க்கும் நார்மன் அவளது சடலத்தையும், உடமைகளையும் (அறியாமல் பணம் சுற்றி உள்ள செய்தித்தாளையும் சேர்த்து) அப்புறப்படுத்தி ஊருக்கு வெளியே உள்ள ஒரு குளத்தில் காரை தள்ளி விடுகிறான்.
மேரியானின் தங்கை லிலாவும், களவாடிய பணத்தை கைப்பற்ற மேரியானின் முதலாளியால் நியமிக்கபட்ட துப்பறிவாளர் அர்போகாஸ்டும், மேரியானை விசாரித்து சாமை அடுத்தடுத்து அவனது ஹர்ட்வேர் கடையில் வந்து விசாரிக்கிறார்கள்
ஒரு கட்டத்தில் அர்போகாஸ்ட், நார்மனின் விடுதிக்கு சென்று விசாரணை நடத்துகிறார். அவனது தாயாரையும் பார்த்து சில கேள்விகள் கேட்கவேண்டுமென சொல்கிறார்.ஆனால், தொடர்ந்து மழுப்பும் நார்மனின் பதிலில் திருப்தி அடையாத அவர்.இந்த விஷயத்தை லிலாவுக்கு தொலைபேசியில் சொல்லிவிட்டு, விரைவில் சந்திப்பதாய் சொல்லிவிட்டு நார்மனுக்கு தெரியாமல் அவன் வீட்டுக்குள் நுழைகிறார்.
மாடி படிகளில் மெதுவாக ஏறிகொண்டிருக்கும் போது திடீரென வரும் ஒரு பெண்ணுருவத்தால் கத்தியால் குத்தி கொலை செய்யபடுகிறார். அர்போகாஸ்டை தொடர்ந்து அந்த விடுதியில் லிலா வும் சாமும் கணவன் மனைவி போல் அங்கு தங்குகின்றனர்.
அவர்களும் அந்த பெண்ணுருவத்துக்கு பலி ஆனார்களா? அல்லது கண்டுபிடித்து மர்மத்தை விடுவித்தார்களா ? என்பதை குறுந்தகட்டில் காண்க…
இந்த திரைப்படத்தில் 40,000 டாலர் தான் மெக்குஃபின்.
மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்த படத்தில் பின்னணி இசையும் (சில நேரங்களில் அமைதியும்) திகிலூட்டுவதாக அமைந்திருக்கும்.
மேலும் இந்த படத்தில் வரும் ஜேனட்டின் குளியலறை கொலை காட்சி. உலக சினிமா வரலாற்றிலேயே மிகவும் முக்கியமான, பிரபலமான காட்சி. இது பிராவோ நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் உலகத்தின் 100 உறைய வைக்கும் சினிமா காட்சிகளின் பட்டியலில் 4 வது இடத்தை பிடித்துள்ளது.
காட்சியின் உக்கிரத்தை கூட்ட, 90 சதவிகித காட்சியையும், ஜேனட்டின் முக பாவங்களையும், கத்தியின் வீச்சையும், க்ளோஸ்-அப் ஷாட்களில் வைத்திருக்கிறார் ஹிட்ச்காக்.அவ்வளவு பயங்கரமாக இந்த சீனில் கத்தி ஒருமுறை கூட மேரியானின் உடலில் பாய்வதை போல ஒரு காட்சி இருக்காது.
மொத்தம் 45 வினாடிகளில், 78 விதமான கோணங்களில் (78 seperate piece of films) படமாக்கபட்டு இருக்கிறது.
கீழே குறிப்பிட்டு உள்ளதை போல

தண்ணீரை மேல் நோக்கி நேராக படமாக்க, ஒரு நீளமான லென்ஸ்சை கீழே பொருத்தி, பின் ஷவரின் உள் துளைகளை அடைத்து விட்டு, தண்ணீர் லென்சுக்கு வெளியே விழும் படி எடுத்திருகிறார்கள்.
கத்தி உடலில் பாயும் சத்தத்தை ஒலிப்பதிவு செய்ய பல சோதனைகளுக்கு பிறகு கசாபா எனப்படுகிற பழத்தில் கதியை பாய்ச்சி பதிவு செய்திருக்கிறார்கள்.
ஜேனட் கொலையாகி கீழே விழுந்த பிறகு ரத்தம் (சாக்லேட் சிரப்) தண்ணீரோடு கலந்து சுழற்ச்சியோடு பாத்டப்பின் டிரைன் ஹோல் வழியே வெளியேறுவதை க்ளோஸ் அப்பில் கட்டிய படி அடுத்த சாட் அதே சுழற்ச்சியில் ஜேனட்டின் குத்திட்ட விழிகளில் இருந்து கேமரா சூம் அவுட் ஆகும். பார்ப்பதற்கு ஒரு ஸ்டில் போட்டோ சுழல்வதை போல போல இருக்கும் அந்த காட்சி, ஜேனட்டின் தலையில் இருந்து ஒரு துளி நீர் சொட்டும் போது தான் அது வீடியோ என்பது புலப்படும். அவ்வளவு தத்ருபமான நடிப்பு!
இந்த படம் வெளியான காலகட்டத்தில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்மணிகள், குளிக்கவே பயந்திருக்கிறார்கள். அப்போது ஒரு தந்தையிடம் இருந்து தனது மகள் குளித்து சில நாட்கள் ஆகிறதென்று எல்லாம் உங்களால் தான் என்று கோபமான கடிதம் வந்திருக்கிறது. குறும்புக்கு பெயர் போன ஹிட்ச்காக் அவருக்கு இப்படி பதிலளித்தார். “முதலில் அவளை உலர் சலவையகத்துக்கு அனுப்புங்கள்” என்று.
த்ரில்லர் பட பிரியர்கள் பார்த்தே ஆக வேண்டிய படம்!
அதாரம்: காண்பனுபவம், இணையம்.
விரைவில் எதிர்பாருங்கள்!!!

பின்குறிப்பு/சுய விளம்பரம்:
‘நகங்களை இழக்க விருப்பமுள்ளவர்களுக்கு! ‘ கட்டுரையை ‘குட்’ … Blogs பகுதியில் வெளியிட்ட விகடனுக்கு நன்றிகள்!
Posted in என் காண்பனுபவங்கள் | Tagged Alfred Hitchcock, சினிமா, திரைப்படம் | 8 Comments »
“இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்டவராக இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் ஏன் காமெடி படங்களே எடுப்பதில்லை?”
“ஏன், நான் எடுக்கும் ஒவ்வொரு படங்களுமே மிகப்பெரிய காமெடி தானே!”- ஆல்ப்ரெட் ஹிட்ச்காக்

நடு நசி, யாருமற்ற தனிமை, ஹிட்ச்காக்கின் சினிமா!
இவரது திரைப்படங்களை பார்ப்பதற்கென்று நான் வகுத்துக்கொண்ட கட்டமைப்பு இது. காதுகளுக்கு ஹெட் போன் அணிந்தால் கூடுதல் சிறப்பு.
சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் படங்களின் பிதாமகர் ஆல்ப்ரெட் ஹிட்ச்காக்கின் ஏதேனும் ஒரு திரைப்படத்தை பார்த்தால்தான் இப்போதெல்லாம் வார இறுதி முழுமை பெற்றதாக ஆகிறது.சனிகிழமை இரவு ஒன்பது மணி ஆனாலே கைகள் நடுங்க ஆரம்பித்து விடுகின்றன. ஆம், ஹிட்ச்காக்கின் சினிமா- ஒரு போதைதான்.
சாதாரண மனிதர்களை அசாதாரணமான சூழ்நிலைகளில் கிடத்துபவையாக இருக்கும் இவரது திரைபடங்களில் வசனங்களை விட காட்சிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். இவரது படங்கள் ஒரு கொலை, பின் அதை கண்டுபிடிக்கும் சம்பவங்களாக மட்டும் அல்லாமல் கொலையாளின் கொலைக்கு முன்/பின் சுபாவங்கள், நடவடிக்கைகள், பேச்சு போன்றவற்றை உளவியல் ரீதியாக அணுகுபவையாக இருக்கும். கதை சொல்லும் விதத்திலும், காட்சிப்படுத்தும் விதத்திலும் தனது ஒவ்வொரு திரைபடங்களிலும் ஏதேனும் ஒரு பரிசோதனை/புதிய முயற்சியை மேற்கொள்வார்.
கிட்டதட்ட அரை நூற்றாண்டு கால சினிமா வாழ்வில் 50க்கும் மேற்பட்ட திரைபடங்களை இவர் இயக்கியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை மிகவும் பிரபல்யமானவை.
1899ல் கிழக்கு லண்டனில் பிறந்த இவர் ஆரம்ப காலங்களில் டிசைனராக ஒரு கேபிள் கம்பெனியில் பணியாற்றினார். பின்பு “பாரமௌன்ட் பிக்சர்ஸ்” நிறுவனத்தில் டைட்டில் கார்டு டிசைனராக பணியாற்றி கொண்டிருந்த சமயத்தில் ”Always Tell Your Wife” படத்தை இயக்கி கொண்டிருந்த இயக்குனர் நோய் வாய்ப்பட, மீதி படத்தை இயக்க வேண்டிய வாய்ப்பு இவருக்கு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் இவர் இயக்கிய “Number 13″ படமும் பாதியில் கைவிடப்பட இறுதியாக இவரது முழுமையான இயக்கத்தில் 1925ல் மௌன திரைப்படம் “Pleasure garden” வெளிவந்தது.ஆனால் அந்த படம் வணிக ரீதியாக தோல்வியை தழுவியது.
அடுத்து வெளி வந்த “The Lodger” வணிக ரீதியாக வெற்றி பெற்றதோடல்லாமல் இவரை முதல் தர இயக்குனராக அனைவரையும் உற்று நோக்க செய்தது.இந்த கால கட்டத்தில் தனது உதவி இயக்குனரான “அல்மா ரேவில்”ஐ 1928ல் மணந்தார்.
மெல்ல மௌன படங்களில் இருந்து தனது முதல் ஒலிஒளி திரைப்படமான “Black Mail” ஐ 1929ல் இயக்கினார். அப்போது அது அவருக்கு பத்தாவது படம்.அடுத்தடுத்து ”The Man who knew too much” (1934) , “The 39 steps” (1935) படங்களின் இமாலய வெற்றியின் மூலம் அவருக்கென்று ஒரு பாணியோடு, தனி தன்மையுடன் பிரிட்டன் திரையுலகின் முன்னணி இயக்குனர் ஆனார்.
பின்பு “The Lady Vanishes” (1938)இன் மற்றுமொரு வெற்றியை தொடர்ந்து 1939களின் முடிவில் ஆஸ்கார் விருதுடன் பெருவெற்றி பெற்ற “Gone with the wind (1939)ன் ஹாலிவுட் பட தயாரிப்பாளர் David O. Selznick இவரை தொடர்ந்து ஏழு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து இவரை அமெரிக்காவுக்கு அழைத்து கொண்டார்.
அவரது முதல் ஹாலிவுட் படமான “Rebecca” (1940)க்கு சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து Shadow of a doubt (1943), Life boat (1943), Spell bound (1945), Notorious(1946), Rope (1948), போன்ற வெற்றி படங்களை கொடுத்தார்.
ஹிட்ச்காக்கின் பொற்காலம் என வர்ணிக்கப்பட்ட 1950களில் தான் அவரது புதிய பரிமாணங்களை வெளிப்படுத்தினார். Strangers on a train (1951), I confess (1953), Dial M for Murder (1954), Rear window (1954), தன்னுடைய மறுபதிப்பான The Man who knew too much (1956), Vertigo (1958), North by Northwest (1959) போன்ற வெற்றி படங்களை எடுத்தார்.
1956ல் அமெரிக்க குடியுரிமை பெற்ற போதும், பிரிட்டிஷ் குடியுரிமையையும் தக்க வைத்துக்கொண்டார்.
அறுபதுகளில், அவரது கிளாசிக் த்ரில்லரான Psyco(1960), The Birds (1963), Marnie (1964), Torn curatin (1966), Topaz (1969) என்று மேலும் ஐந்து வெற்றிப்படங்களை கொடுத்தார்.
சினிமாவில் தீவிரமாக இருந்த போதும் Alfred Hitchcock Presents (1955-62) மற்றும் The Alfred Hitchcock Hour (1962-1965) என்று இரண்டு தொலைகாட்சி தொடரையும் இயக்கினார்.
தனது இறுதி படமான Family Plot (1976)க்கு முன்பு Frenzy (1972) என்ற வெற்றி படத்தையும் கொடுத்தார்.
பின்பு 1979 ல் இங்கிலாந்து அரசு இவருக்கு “Sir” பட்டம் வழங்கி கௌரவித்தது.
வளரும் இயக்குனர்களால் அதிகம் ஆராயப்பட்ட, படிக்கப்பட்ட ஒரு இயக்குனராக திரை உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய இவர் 1980 ஆம் ஆண்டு தனது எண்பதாவது வயதில் சிறுநீரக கோளாறு காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ்சில் உயிர் இழந்தார்.
பொதுவாக மக்களுக்கு பயத்தின் மேல் உள்ள ரகசிய ஆசையே (பெருகி வரும் தீம் பார்க்களின் எண்ணிக்கையே இதற்க்கு சான்று) இவரது வெற்றிக்கு பின்னால் இருக்கும் மிக முக்கிய காரணம்.
ஏனெனில் நமக்கு எப்போதும் பயம் என்ற குளிர்ந்த நீரில் காலை விட்டு பார்ப்பதில் ஆனந்தம்தானே?
ஒரே ஒரு பாட்டுக்கு நாலு கோடியும், நாப்பது லொக்கேசனும் தேவைப்படும் இந்த காலகட்டத்தில், ஒரு முழு திரைப்படமும் எடுக்க அவருக்கு ஒரு ஒரு லொக்கேசன் இருந்தாலே போதும். இதற்க்கு உதாரணமான திரைபடங்களை வரிசையாக அடுக்கலாம்.
படங்களின் தலைப்பை சொடுக்கி ட்ரைலரை பார்க்கலாம்….

அட்லாண்டிக் கடலில் இரண்டாம் உலகபோரில் ஒரு பிரிட்டிஷ் அமெரிக்க பயணிகள் கப்பலும், ஜெர்மனியின் U-Boat ம் மோதலில் ஈடுபட்டு மூழ்க பலவேறு தரப்பட்ட பயணிகள் ஒரு உயிர் காக்கும் படகில் தஞ்சம் அடைகின்றனர். சிறுது நேரத்தில் கடலில் தத்தளித்து கொண்டிருக்கும் ஒரு ஜெர்மனியனை பலத்த வாக்கு வாதங்களுக்கு பிறகு அனுமதிக்கிறார்கள். ஆனால் அனுமதிக்கபட்டவன் யார்?
இந்த பின்னணியில் சஸ்பன்ஸ் மற்றும் த்ரில்லிங்குடன் தனக்கே உரிய பாணியில் இயக்கி இருப்பார் ஹிட்ச்காக். இந்த திரைப்படம் முழுவதும் Life boat என்று சொல்ல கூடிய உயிர் காக்கும் படகில் வைத்ததே எடுத்திருப்பார். படகு மற்றும் கடல் இவ்வளவுதான் லொக்கேசன்.
மிகச்சிறிய செட்டில் எடுக்க பட்ட திரைப்படம் என்ற உலக சாதனையை 65 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் முறியடிக்கப்பட முடியாமல் தக்க வைத்துக்கொண்டுள்ளது இந்த திரைப்படம்.

ஒரு உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அவருடைய முதல் டெக்னிக் கலர் படம்.
ஒரு தினவுக்கவும், சுவாரஸ்யத்திற்காகவும் ஒரு கொலையை செய்து விட்டு தங்களால் மறைக்கவும் முடியும் என்று நிரூபிப்பதற்காக அமுதன், இளமாறன் போல இரண்டு வாலிபர்கள் தங்களுக்கு பிடிக்காத ஒரு நண்பனை தங்களது அப்பார்ட்மென்டில் வைத்தே கொலை செய்கின்றனர். அவனை ஒரு மரப்பெட்டியில் அடைத்துவிட்டு அதை விருந்து உபசரிக்கும் மேசையாக்கி அவனது பெற்றோர், முன்னாள் ஆசிரியர் (ஜேம்ஸ் ஸ்டீவர்ட்), காதலி மற்றும் சிலரையும் விருந்துக்கு அழைகிறார்கள். இப்படியாக பயணிக்கும் கதையை ஒரு பெரிய ஹாலில் வைத்தே, (கிட்டதட்ட மேடை நாடக செட் போல) முழு திரை படத்தையும் விறுவிறுப்பு குறையாமல் எடுத்திருப்பார்.
இந்த படத்தின் மிக முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், படம் முழுவதும் ஒரே ஷாட்டில் எடுத்ததை போல தோற்றமளிக்க செய்திருப்பார்.
அந்த கால கட்டத்தில் தொடர்ந்து பத்து நிமிடங்களே ஒளிப்பதிவு செய்யும் வசதி இருந்திருக்கிறது. ஆகையால் முதல் ஷாட் 9:34 நொடிகளில் ஒரு நடிகரின் முதுகில் கருமையாக முடிய இரண்டாவது ஷாட் அவரது முதுகில் இருந்தே தொடங்கும். இப்படியாக 81 நிமிடம் ஓடக்கூடிய இந்த திரைப்படத்தை மிகத்திறமையாக பத்தே ஷாட்களில் முடித்திருப்பார்.

விமர்சகர்களால் ஹிட்ச்காக்கின் சிறந்த படமாக கருதப்படும் படம்.
சதுர வடிவில் உள்ள ஒரு பிளாட்டில் கால் முறிந்து வீல் சேரில் இருக்கும் ஒரு புகைப்பட கலைஞனுக்கு (ஜேம்ஸ் ஸ்டீவர்ட்), நாளெல்லாம் ஜன்னலில் அமர்ந்தபடி மற்ற பிளாட்டில் நடப்பவைகளை பைனாகுலர் மூலம் நோட்டம் விடுவதே பொழுதுபோக்கு . தினமும் இவனை சந்திக்க வரும் காதலியிடமும் (கிரேஸ் கெலி) , நர்சுடனும் நடந்தவைகளை/நடப்பவைகளை பற்றி புரளி பேசுவது இவனது வாடிக்கை. இந்த சூழ்நிலையில் ஒரு நாள் எதிர் பிளாட்டில் இருக்கும் சேல்ஸ்மேனுடைய மனைவி மர்மமான முறையில் காணாமல் போக சூழ்நிலைகளையும், நடந்தவைகளையும் கிரகிக்க சேல்ஸ்மேன் தான் அவளை கொன்று இருக்க வேண்டுமென கருதுகிறான். அவனது யூகம் தவறா ? அல்லது இவன் காதலியின் துணை கொண்டு இதை துப்பறிந்து வெளிகொனர்கிறானா? என்பது மீதி கதை.
ஒரு அப்பார்ட்மென்ட் செட்டில் விறுவிறுப்பாக இயக்கியதை விட கூடுதல் விசேஷம் படத்தில் மொத்தம் இரண்டே கேமரா கோணங்கள் தான். ஒன்று ஜன்னலுக்கு வெளியே, ஜன்னலுக்கு உள்ளே !!

எனக்கு மிகவும் பிடித்த ஹிட்ச்காக்கின் திரைப்படம்.
ஒரு பத்து நிமிடம் பார்த்து விட்டு நாளை முழுதாக பாரக்கலாம் என்றெண்ணி பார்க்க ஆரம்பித்தவன் படம் முடிந்து End credits போடும் போதுதான் சுய நினைவிற்கு வந்தேன்.
ஒரு முன்னால் பிரிட்டைன் டென்னிஸ் வீரன், பணத்திற்காகவும், திருமணத்திற்கு முன்பு ஒரு அமெரிக்க கிரைம் நாவல் எழுத்தாளர் ஒருவனுடன் உறவு வைத்து இருந்ததற்காகவும் சொந்த மனைவியை (கிரேஸ் கெலி) கொலை செய்ய முடிவு செய்கிறான். மிக நேர்த்தியாக திட்டமிட்டு ஒருவனை கொலை செய்ய பணியாமர்த்துகிறான். திட்டம் இதுதான் மனைவியின் பழைய காதலன் ஊர் திரும்பியதும், அலிபிக்காக அவனோடு இரவு பார்ட்டிக்கு செல்ல வேண்டியது. வீட்டின் இரண்டு சாவியில் ஒரு சாவியை தன்னுடைய மனைவியின் கைபையில் இருந்து திருடி மாடிபடிகளில் ஒளித்து வைக்க வேண்டியது, இவர்கள் பார்டியில் இருக்கும் நேரம் கொலையாளி அந்த சாவியை உபயோகபடுத்தி வீட்டுக்குள் சென்று ஹாலில் ஒளிந்து கொள்ள வேண்டியது. மிகச்சரியாக 11 மணிக்கு இவன் வீட்டுக்கு போன் செய்ய வேண்டியது, அவள் தொலை பேசியை எடுத்து ஹலோ சொல்லும் போது கொலையாளி பின்னால் இருந்து ஸ்கார்ப் மூலம் அவள் கழுத்தை நெரித்து கொலை செய்து, திருட வந்தவன் எதேச்சையாக கொலை செய்தது போல தப்பிக்க வேண்டியது.
பல இடர்பாடுகளுக்கிடையே எல்லாம் சரியாக நடக்க 11 மணிக்கு தொலை பேசி மணி ஒலிக்கிறது..
கிரேஸ் கெல்லி தனது படுக்கை அறையில் இருந்து எழுந்து இருளடர்ந்த ஹாலுக்கு வந்து தொலை பேசியை எடுக்க எதிர்முனையில் அவள் கணவன் மெளனமாக இருக்க, ஹலோ ஹலோ என கிரேஸ் கேட்டுக்கொண்டே இருக்க பின்னால் இருந்து கொலையாளி கிரேஸ் கெல்லியின் மயில் கழுத்தை நெரிக்க முன்னேறுகிறான்……..பிறகு?????
மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்த திரைப்படத்தில் ஒளி அமைப்பும் ஒரு கதாபாத்திரமாகவே இருக்கும். பல திருப்பங்களை கொண்ட இந்த விறுவிறுப்பான திரைபடத்தை அவர் 90 சதவிகிதம் ஒரே ஹாலில் வைத்தே இயக்கி இருப்பார். மீதி 10 சதவிகிதம் வேறு இரண்டு செட்களில் எடுக்கபட்டு இருக்கும்.
விரைவில்!
McGuffin (மெக்குஃபின்) டெக்னிக் சார்ந்த படங்கள்:

ஹிட்ச்காக் சூம்/ டாலி சூம் டெக்னிக் சார்ந்த படங்கள்:

Posted in என் காண்பனுபவங்கள் | Tagged சினிமா, திரைப்படம் | 10 Comments »
பிழைப்புக்காக வெளியூர்களில் இருந்து மெட்ரோவுக்கு வந்து, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மட்டுமே தங்கள் குடும்பத்தினரை பார்க்கும் அன்பு உள்ளங்களுக்காக…
ரயில் பயணத்தை போலவே வாழ்க்கை பயணமும், சிலருக்கு அது முன்பதிவு செய்யப்பட்ட சவுகர்யமான பயணமாக இருக்கும், ஆனால் பலருக்கு முன்பதிவு செய்யப்படாத அசவுகர்யமான பயணமாக இருக்கும்.
“ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகறாங்க பணக்காரங்க மேலும் பணக்காரங்க ஆகறாங்க” ன்னு முதல்வன்லையும், ”Rich get richer, Poor get poorer” சிவாஜிலையும் நம்ப அமரர் சுஜாதா எழுதுனது இந்த விசயத்துல ஒரு மாதிரியா ஒத்து போகுது.
ஏன்னா, ரயில்வே துறையின் சட்ட மாற்றத்தின்படி( 2008 ) அதிகபச்சமாக பயண தேதிக்கு மூன்று மாதங்கள் முன்பாகவே இருக்கை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பயணத்தேதி அன்று இருக்கை முன்பதிவு செய்துகொண்டிருந்த”தத்கால்” எனப்படுகிற அவசர கால முன்பதிவு சட்டமும் திருத்தபட்டு, 5 நாட்களுக்கு முன்னதாகவே செய்து கொள்ளும் வசதியும் கொண்டு வரப்பட்டது.
இப்போ, டெக்னாலஜிய யூஸ் பண்ண தெரிஞ்சவனுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. நோம்பி நொடி என்னைக்குன்னு காலண்டர பாக்கறோம். வீடுலயோ, ஆபீஸ்லயோ உக்காந்து மொத நாள் கவுண்டர் தெறந்த்தொடனே நெட்டுகுள்ள கையா உட்டு (அதாங்க ரயில்வே துறையின் பிரத்யேக வலை தளமான www.irctc.co.in) டிக்கெட்ட வாங்கிட்டு, கையில வெச்சிருக்கற ரெண்டு மூணு அட்டைல எதோ ஒரு அட்டைய வச்சு நோகாம புக் பண்ணிற வேண்டியது. அப்புறம் கண்டிப்பா மறக்காம ஆபீஸ்ல போயி பிரிண்ட் அவுட் எடுத்து வெச்சுகிட்டு, சௌரியமா நம்ப வேலைய பாக்க ஆரம்பிச்சிருவோம்.
ஆனா பாவம் எப்படியும் டிக்கெட் கெடசிரும்னு, எதுக்கு நிக்கறோம்னு தெரியாம ரயில்வே ஸ்டேசன்ல கியூல நிக்கறவங்க நின்னுகிட்டுத்தான இருக்கறாங்க. கொஞ்சம் அதிகமானாலும் பரவால்லன்னு ஏஜென்ட் மூலமா டிக்கெட் வாங்கறவங்களும் வாங்கிட்டுதான் இருக்கறாங்க, டெக்னாலஜிய தெரிஞ்சுக்காதது/ யூஸ் பண்ண தெரிஞ்சுக்காதது யார் தவறு? மக்கள் தவறா ? அல்லது சரியாக மக்களுக்கு தேவையான படிப்பறிவோ விழிப்புணர்வோ தரத்தவறியது இந்த நாட்டின் அரசிய…….ப்ச்..எனக்கு இதற்கு இப்போது நேரமில்லை..நான் அவ்வளவு நல்லவனுமில்லை.
அட, நான் சொல்ல வந்த சமாச்சாரமே வேறங்க..
நம்பாளு ஒருத்தன் தீபாவளிக்கு ஊருக்கு போகணும். அவனுக்கு நேரம் சரியா இருந்தா, அவன் 3 மாசத்துக்கு முன்னாடியே டிக்கெட் புக் பண்ணி சந்தோசமா ரிசர்வேசன்ல ஊருக்கு போறான்..இல்லெனா அவனுக்கு அன் ரிசர்வேசன்லையே தீபாவளி… இதுதான் கான்செப்ட்.
“ரன் லோலா ரன்”, ஏக் தின் 24 கண்டே, அப்புறம் நம்ப 12B போன்ற படங்களில் வந்த மேட்டர் தான்…
ஆனா நான் முன்னால சொன்ன மாதிரி அட்டைய வெச்சு புக் பண்ற மேட்டர், விசுக்குனு சொல்றது சுலபமா இருந்தாலும், அதெல்லாம் சரியா நடக்கணும்னா நம்ப ஜாதகத்துல இருக்க சுக்ரன், சச்சின் எல்லாம் நம்பல மட்டுமே பாத்துகிட்டு இருந்தாதான் உண்டு. இதுல ஏகப்பட்ட சிக்கல் இருக்குங்க.அதுல ஒவ்வொரு கட்டமா தாண்டனும், மொதல்ல எடம் இருக்கான்னு பாக்கணும், இருந்திச்சுன்னா, நம்ப ஜாதகத்தையே குடுக்கணும், கடைசியா அட்டைய வெச்சு நம்பர் தட்டணும்.எல்லா முறவாசாலும் செஞ்சிட்டு பட்டன அமுக்குனம்னா……..
100 கோடி மான்கள் ஓடும் வேகம் போல… இதயம் படக்கு படக்கு ன்னு அடிச்சுக்கும்….
அப்புறமென்ன வழக்கம்போல வெப்சைட் பல்ல இளிச்சிரும்…சமயத்துல கைகாசும் போயிரும், ஆனா டிக்கெட் புக் ஆகாது.
இதற்கு பின் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றும் அதிகமில்லை ஜென்டில் மேன்..பரமபதத்துல பாம்பு கடிச்ச மாதிரிதான் திரும்ப மொதல்ல இருந்து வெளையாட வேண்டியது தான்.
ஆமா, அத புடிச்சு எல்லாரும் ஒரே நேரத்துல தொங்குனா என்னாகும் சொல்லுங்க… அப்புறம் அதுவும் தொங்கிரும்.நாலஞ்சு தடவை தொங்கிட்டு, அஞ்சாவது தடவ போய் பாத்தம்னா வெயிடிங் லிஸ்ட் 200ன்னு காமிக்கும் (வடை போச்சே!). அதுக்கப்பறம் எந்த ட்ரெயின்ல பாத்தாலும் வெய்டிங் லிஸ்ட் 100 மேல தான் இருக்கும். சரி போன போகுது, அதான் அடுத்த ஆப்சன் தத்கால் இருக்குல, இருக்குல,..இருக்குல. ஆனா மறுபடியும் நம்ப யோகத்துக்கு தத்கால்ல புக் பண்ணும் போது பழைய மாதிரி பாம்பு கடிக்காம இருந்தா அது போன பிறவில நம்ம பெத்தவங்க பண்ண பிரியாணி தான்.
சரி, சரி, Let us watch the play …
தீபாவளிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, ஆபீஸ், IRCTC ஸ்க்ரீன்…
அப்படியே பரிட்சை ரிசல்ட் பாக்கிறதா விட ரொம்ப படபடப்போட இருப்பான் நம்பாளு…
எல்லா கட்டத்தையும் தாண்டி அவனுக்கு டிக்கெட் கன்பார்ம் ஆனதும், “எஸ் எஸ் எஸ்” ன்னு மின்னலே மாதவன் மாதிரி குதிக்காத குறைதான். வாழ்கை மேலேயே ஒரு நம்பிக்க வந்திரும் அவனுக்கு.அவன சுத்தி இருக்கறவங்க எல்லாருமே விக்ரமன் படத்துல வர்ற மாதிரி நல்லவங்களாவே தெரியுவாங்க.. அவங்கம்மாவ கூப்புட்டு அப்பவே மெனுவ சொல்ல ஆரம்பிச்சிருவான்.அடுத்தது அவன் பிரண்ட்ஸ் எல்லாருக்கும் டிக்கெட் கெடச்சுதான்னு செக் பண்ணிக்குவான்.(அங்கயும் இதே கூத்து தான்)
சில பேருக்கு கெடைச்சிருக்காது , அவங்க பஸ்லதான் கெடச்சிதும்பாங்க… ”என்னது பஸ்சா, இந்த நாலு சக்கரம் வெச்சு கொஞ்ச நீளமா, ராத்திரி தூங்க உடாம டீ.வி ய போட்டுட்டு வருவானுக, அடிக்கடி ஜெர்க் வேற ஆகுமே அதுவா.., வோன்ட் யூ பீல் டயர்ட்” ன்னு ஓவர் சீன் போடுவான்.
ஆனா இவனுக்கும் ஆப்பு வெக்க ஒரு ஆசாரி இருப்பான்… “என்னது ட்ரெயினா, ரொம்ப நீளமா, பொட்டி பொட்டியா, ரெண்டு கம்பி மேல போகுமே, தடக்கு தடக்குனு சத்தம் கூட வருமே.., அட ராமா, எப்பிடி தான் 8 மணி நேரம் ட்ரேவல் பண்றயோ… பை மீன்ஸ் ஆப் ஏர், ஒன்லி டூ அவர்ஸ் மச்சி…ஐ வில் பீ தேர் பிஃபோர் யூ.. . நாங்க எல்லாம் பாலைவனத்துலையே பால் பாயசம் சாபட்றவங்க, தெரியும்ல எங்க கிட்டயேவா”ன்னு பல்பு குடுப்பான்.
“சரிடா சரிடா பெருமைக்கு எருமை மேச்ச பயலுக தான் நீங்கல்லாம்…எல்லாம் எங்களுக்கு தெரியும் போடா..” திட்டிட்டு சமாதானமாவான்.
அடுத்ததா அவன் டேமேஜர் கிட்ட தகவல சொல்லிட்டு லீவ ஒரு ரெண்டு நாள் சேத்தி அப்பளை பண்ணிருவான்.. அவரு வழக்கம் போல “I will approve for now, but as you know if situation demands then…”அப்படினு ஒரு pause விட்டுட்டு கடலோர கவிதைகள்ல சத்தியராஜ் லாங்சாட்ல நடந்து போற மாதிரி போயிட்டு இருப்பாரு…
லீவ் ஓகே ஆகி தீபாவளிக்கு மொதநாள், அவன் கெளம்ப வேண்டிய அன்னிக்கு, எல்லாம் திட்டபடி நடத்துவான்.லோக்கல்ல இருக்கறவங்க கிட்ட செண்டிமெண்டா பேசி வேலைய நைசா தள்ளி விட்டிட்டு ஆபிஸ்ல இருந்து ஸ்டேஷன்க்கு 2 மணி நேரம் முன்னாடியே கெளம்பிருவான்.
“பாஸ், அதான் டிக்கெட் புக் பண்ணிடிங்கல்ல அப்பறமென்ன மெதுவா போலாம்ல கேட்டா”..
“ரயில புடிக்க கூட எங்க பரம்பரைல யாருமே ஓடிப் போனது கெடயாது ”னு வெட்டி சீன் போட்டுட்டு நேரத்துலையே கெளம்பி ரிலாக்ஸ்டா தன் பயணத்த கண்டினியூ பண்ணுவான்.
ரவுண்ட் நெக், தொவைக்காத ஜீன்ஸ் பான்ட்,காதலன்” பிரபுதேவா சூ, சோல்டர் பேக்(உள்ள பூரா வேறென்ன அழுக்கு துணிதான்), ‘ஐபாட்’(இதுவும் மொபைலும் அதிகமா பொழங்க ஆரம்பிச்சதுக்கு அப்பறம் ஊருக்குள்ள எவனும் பக்கத்துல இருக்கறவான் கிட்ட பேசமாட்றான். கர்ணன் கவச குண்டலத்தோட பொறந்த மாதிரி இத காதுல இருந்து கழட்டவே மாட்றானுக) , மினரல் வாட்டர் சகிதமா மொத ஆளா வண்டி பிளாட்பாரத்துக்கு வரதுக்கு 15 நிமிஷம் முன்னாடியே போயிருவான். இவன் மட்டுமில்ல ரயில்வே ஸ்டேசன்ல பாத்திங்கன்னா ஊருக்கு போற முக்காவாசி பயலுக இந்த கெட்டப்ல தான் இருப்பானுக …
போன் போட்டு ”சரியா 5 மணி, 3வது பிளாட்பார்ம் கரெக்ட்டா வந்தரனும், என்ன”ம்பான், எதோ கால் டாக்ஸி தான் புக் பண்ணறான்னு பாத்தா, “அடடடடா, எத்தன தடவப்பா..உங்களுக்கு சொல்றது சரியா 5 மணி, அலாரம் வெச்சுகிட்டு படுங்க,சரியா”ம்பான்.
வண்டி வர்ற சமயம் ஒரு பரபரப்பான சூழ்நிலை நிலவும்.பாவம், அன்ரிசர்வுல போற மக்கள் சீட் புடிக்க அரக்க பறக்க ஓடுவாங்க.
அதுல யாராது ஒருத்தன் நம்பாள் மேல மோதிருவான்.உடனே “கண்ண என்ன பொடனிலயா வெச்சிருக்கே” ன்னு ஒரு மில்லியன் டாலர் கொஸ்டியன் கேப்பான்.மோதுனவனும் ”சாரி பாஸ்” அப்படின்ட்டு கீழ விழுந்த சோல்டர் பேக்க தூக்கிட்டு மறுபடியும் ஓடுவான்.
TTR அ சுத்தி மக்கள் நின்னுகிட்டு “பாத்து எதாவது பண்ணுங்க, சார்”ன்னு. கேட்டுகிட்டு இருப்பாங்க.
யாரு இந்த ஆபிசர், கிளைமேட்க்கு சம்பந்தமே இல்லாம கோட் சூட்எல்லாம் போட்டுட்டு நிக்கிறாரு அப்பிடின்டு நக்கலா ஒரு பார்வையோடபாட்டு கேட்டுகிட்டே பிளாட்பாரம் ஓரமா நின்னுகிட்டு எங்கயாச்சு பராக்கு பாத்துட்டு இருப்பான்… எதோ தோள்ல ஓரசற மாதிரி இருக்கும்…
திடீர்னு யாரவது கைய புடிச்சு இழுத்து “ஊருக்கு போகும் போது பொருள உட்டுட்டு போங்கடா..உசிர உட்றாதிங்க”பான். ஹெட் செட்ட கழட்டி விட்டதுமில்லாம யார்ரா அவன் நம்பள திட்றதுன்னு யோசிச்சுகிட்டு இருக்கும் போதுதான் சாருக்கு அவரு தோள ஓரசுனது ரயிலுனே ஒறைக்கும்.
அடுத்து வண்டி வந்ததும் மொதல் வேலைய ரிசர்வேசன் சார்ட்ல, அவன் பேருக்குக்கு பக்கத்துல எதாவது ”ஸ்வப்னா, ஸ்வேதா, லாவண்யா” ன்னு மாடர்ன் பொண்ணு பேரு இருக்கான்னு பாப்பான்..இருந்தா அப்பவே பொகைய போட்டுட்டு கனவுலகத்துக்கு போயிருவான். இல்ல “சாரதாம்பாள், சுந்தராம்பாள், ஈசுவரி” ன்னு போட்ருந்தா போட்ட பொகைய ஆப் பண்ணிட்டு..அதென்ன சினிமால மட்டும் தான் த்ரிஷா, சதா, சமீரா எல்லாரும் பக்கத்து பெர்த்துல வருவாங்களா? ன்னு பொலம்பிகிட்டே வண்டில ஏறுவான்.
இவன் பெர்த்துக்கு போனா ..ஒரு பெரியவரும் பாட்டியும் உள்ள இருப்பாங்க…அவங்க மகன், மருமக பேரம் பேத்திக வெளிய இருந்து( “பாத்து போயிட்டு வாங்க”, “உடம்ப பாத்துகோங்க”)பேசிகிட்டு இருப்பாங்க.. அப்புறம் ஒரு மிடில் கிளாஸ் அம்மா, அப்பா அப்பறம் அவங்க குழந்தை இருக்கும்… அது போக இன்னொரு பெரியவரும் இருப்பார்.. செட்டப்ப பாத்ததுமே நம்பாளுக்கு தெரிஞ்சு போயிரும்…இன்னிக்கு படுக்க மணி பதினொன்னு ஆயிடும்னு…
ஏன்னா, நம்பாளுக்கு மிடில் பர்த்தா இருக்கும். அடச்சே, அப்பர் பர்த் கெடச்சுட்டா பிரச்சனை இல்லாம நேரமே காலமே தூங்கிறலாம்.. இல்லேனா இவங்க தூங்கற வரைக்கும் அவங்களோட அளவலாவிட்டு, அவங்க போடற மொக்கைய கேட்டுகிட்டு , எப்படா கடைய சாத்துவாங்கன்னு காத்திருக்க வேண்டியது தான். அப்படின்னு மனசுக்குள்ள சலிச்சிக்குவான்
சட்டுன்னு நம்பாளு எதிர்பாக்காத மாதிரி அந்த குழந்தையோட அப்பா “சார், குழந்தை வேற இருக்கு, நீங்க அப்பர் பர்த் போய்க்க முடியுமான்னு” கேப்பார். நம்பாளும் குஷியா வாங்கிட்டு மேல போய்டுவான்.
அறிமுகமான கொஞ்ச நேரத்துலையே அந்த ரெண்டு பெரியவரும், எந்தெந்த தட் ரெயின், எந்தெந்த ஊர் வழிய எத்தன மணிக்கு கெளம்பி எத்தன மணிக்கு சேரும் ங்கறத பத்தி ஒரு சின்ன விவாதத்த ஆரம்பிசிரு வாங்க, “இப்ப மாதிரியா அப்பல்லாம் பாத்திங்கன்னா” ங்கற மாதிரி பேச்சுக்கள்,அப்பறம் அப்படியே கொஞ்ச நேரத்துல பொதுநலன், அரசியல், இந்தியா முன்னேற மிக எளிய வழிமுறைகள்ன்னு தீவிரமா எறங்கிருவாங்க.. பாட்டியம்மா பெரியவர் எப்ப படுப்பார் அப்புடின்னு தூக்கத்தோட அவரு வாயவே பாத்திட்டு இருப்பாங்க. குழந்தைக்கு அந்த அப்பா,அம்மா ரெண்டு பெரும் சோறு ஊட்ட ட்ரை பண்ணி டயர்ட் ஆயிருபாங்க.. பாட்டி கொஞ்சம் குழந்தை வளர்ப்பு பற்றி டிப்ஸ் குடுக்க ஆரம்பிச்சிருக்கும்..
நமபாள், வெளியில எதாவது ஒரு பவன்ல வாங்குன சப்பாத்தியையும், இட்லியையும் 5 நிமிசத்துல சாப்டுட்டு…கவர ஜன்னல் வழியா டிஸ்போஸ் பண்ணிட்டு.. பிஸ்லரி வாடர்ல கைய கழுவிட்டு, சூவ கழட்டி சீட்டுக்கு அடியில போட்டுட்டு…கொஞ்சம் நறுமண த்தோட இருக்கற சாக்ஸோட மேல ஏறி, கவச குண்டலத்த மாட்டிட்டு, யேசுதாஸ எழுப்பி விட்டுட்டு இவன் 5 நிமிசத்துல தூங்கிருவான்.
மொதல் தவணையா நம்ப TTR வந்து எழுப்பி டிக்கெட் செக் பண்ணிட்டு போவாரு, மொனகிட்டே மறுபடி தூங்கிருவான். திடீர்னு பாதி தூக்கதுல முழிச்சு பாத்தா, ‘ஐபாட்’ல அட்னான் சாமி தமிழ்ங்கற தக்காளி பழத்து மேல புல்டோசர் வெச்சு ஏத்திகிட்டு இருப்பார்… அணைச்சிட்டு கவச குண்டலத்த கழட்டி வெச்சிட்டு திரும்பி படுப்பான்….
கால் மணி நேரத்துல, குழந்தை அழுக ஆரம்பிச்சிருக்கும்..அந்தம்மா குழந்தைய சமாதானபடுத்தி தோற்றுபோக, அப்புறம் அந்த அப்பா கொஞ்சம் அந்த குழந்தைய தூக்கிகிட்டு ஒரு சின்ன வாக் போக…புரண்டு படுப்பான்..
தூக்கத்துல நம்பாளுக்கு ஒரு கெட்ட கனவு வரும். ஒரு ஜூவுக்குல ஒரு சிங்கத்தோட கூண்டுக்குள்ள இவன போட்டிருக்காங்க அது தெரியாம தூங்கிகிட்டு இருக்கான்…திடீர்னு சிங்கம் உறுமுது…அரண்டு போயி முழிச்சு பாப்பான், முளிச்சதுக்கு அப்பறம் தான் தெரியும் உருமுனது சிங்கமில்ல, கொறட்ட விட்டிட்டு இருக்கறது அந்த பெரியவர்னு.,அட ஆண்டவா தூங்க விடமாட்டாரு, போ ..புரண்டு படுப்பான்..
மறுபடியும் நடு ராத்திரியில் புரண்டு படுப்பான்.. அந்த குழந்தையோட அப்பா கீழ பேப்பர் விரிச்சு படுத்து கிட்டு ஒரு கைய சீட்ல படுதிருக்கற குழந்தை மேல போட்டு தூங்கிகிட்டு இருப்பார்…
டுங் டூங்…
“யத்ரியோ கடி கரிபியா ஞான் கிஜியே…..”வண்டி எண் ஆறு ஆறு ஐந்து மூன்று”,
“டீ, காபி, டீ காபி”…. மணியை பாப்பான் இன்னும் ஒரு மணி நேரமி…..
“தம்பி, ஸ்டேஷன் வந்திரிச்சுப்பா”, ஜிலேபிய வாயில வெக்கும் போது எவண்டா தள்ளி விட்டது ன்னு முழிச்சு பாத்தா அந்த பெரியவர் பெரிய மனசு பண்ணி எழுப்பி விட்டிருப்பார்.
“தேங்க்ஸ் சார்”.. அப்டின்ட்டு வாய தொடச்சிட்டு, தலைய சீவுவான்…
“அலாரமும் அடிக்கல, அப்பாவும் போன் பண்ணல என்ன ஆச்சு”ன்னு மொபைல செக் பண்ணுவான். தூக்கத்துல சுவிட்ச் ஆப் ஆயிருக்கும். மொதல்ல மொபைல ஆன் பண்ணி “எங்க இருக்கீங்க…என்னப்பா நீங்க, நான் தான் உங்கள அலாரம் வெக்க சொன்னன்லன்னு தோரணய ஆரம்ப்சிருவான்…..
“தம்பி, ஸ்டேஷன் வந்திரிச்சுப்பா”…..”யத்ரியோ கடி கரிபியா ”…..”இப்ப மாதிரியா அப்பல்லாம் பாத்திங்கன்னா”…… “”சார், குழந்தை வேற இருக்கு”…. “ ”ஊருக்கு போகும் போது பொருள உட்டுட்டு போங்கடா”.. “கண்ண என்ன பொடனிலயா வெச்சிருக்கே”…..”ரயில புடிக்க கூட எங்க பரம்பரைல”….” I will approve for now, but as you know”.”சரிடா சரிடா பெருமைக்கு எருமை மேச்ச”…..”என்னது ட்ரெயினா”…..”என்னது பஸ்சா”…..
தீபாவளிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, ஆபீஸ், IRCTC ஸ்க்ரீன்…
அப்படியே பரிட்சை ரிசல்ட் பாக்கிறதா விட ரொம்ப படபடப்போட இருப்பான் நம்பாளு…
டிக்கெட் கன்பார்ம் ஆகி புக் ஆயிரும்… சந்தோசமா லீவ ஒரு ரெண்டு நாள் சேத்தி அப்பளை பண்ணுவான் … அவன் சந்தோசத்துல சாணிய கரைச்சு ஊத்தற மாதிரி, அவன் டேமேஜர் ஒரு குண்ட போடுவாரு….
திடும்…திடும்…திடும்…
ஏற்கனவே திட்டமிட்டபடி, தீபாவளி அன்றும் அதற்க்கு மறுநாளும் ஏகப்பட்ட ஆணிகள் அறையப்படும் என்றும், அத்துணை ஆணிகளையும் கழற்றி ஏறிய இந்த பிரபஞ்சத்திலேயே இவன் ஒருவனால் மட்டுமே முடியும் என்று திட்ட வட்டமாக கூறி இவனது தீபாவளி கனவை கர்ண கொடூரமாக கலைத்து விடுவார்.
”ச்சே, இப்பிடி தீபாவளி அன்னிக்கு ஊருக்கு போக முடியாம ஆயிரிச்சே”ன்னு நெருக்கமானவங்க எல்லாம் பரிதாபபடுவாங்க…
“படபடபடபட, சர், சூம், டமால், அய்யன் பட்டாசுகள் வாங்கிடிங்களா”ன்னு இந்த நேரம் பாத்து எதிரிக எல்லாம் இளக்காரமா, சேட்டை பண்ணுவாங்க…
வீட்டுக்கு போன் பண்ணி சொன்னா, அவன் அப்பத்தா மட்டும் “அப்புடி என்னடா பொல்லாத கம்பேனி, ஒரு நோம்பி நொடி கூட இல்லாம, தீபாவளி அன்னிக்கு கூடவா வேல பாப்பாங்க..என்னமோ போ”ன்னு வருத்தப்படும் .
நம்பாளு மேக்னாவ பிரிஞ்ச சூர்யா மாதிரி சோகமா ஆயிருவான்..ஒரு சிம்பதிகாக வாழ்வே மாயம் கெட்டப் லையே டேமேஜர் முன்னாடி திரியுவான்…
திடீர்னு, தீபாவளிக்கு மூணு நாள் முன்னாடி அவர் வந்து இவன் கழற்றி ஏறிய வேண்டிய ஆணிகள் இன்னும் சரியாக அறைய படவில்லை என்றும், அறைவதற்கு இன்னும் சில நாட்கள் இருப்பதாகவும் சொல்லி…இவனது தீபாவளி பயணத்தை உறுதி செய்து விடுவார்.
இந்த சந்தோசமான சேதிய வீட்டுக்கு சொல்லிட்டு , உடனே ஓடி போடி ப்ரம்ஹாஸ்த்ரத்த (தத்கால்) பயன்படுத்துவான் (டிக்கெட் எல்லாம் ரெண்டு நாள் முன்னாடியே தீந்து போயிருக்கும்டா முட்டாள்.அப்படின்னு புத்தி சொல்லும், ஆனா பாழாப்போன மனசு கேக்கவா செய்யும்) . அடுத்து டிராவல்ஸ்ல எல்லாம் செக் பண்ணுவான். அங்கயும் கைய விரிச்சிருவாங்க.
அவனுக்கு ரெண்டே ரெண்டு ஆப்சன் தான் இருக்கும்…
ஒன்னு ட்ரெயின்ல அன்ரிசர்வுல போறது, இன்னொன்னு பஸ்ல அன்ரிசர்வுல போகறது (அரசு பேருந்துன்னா, வரிசைல நின்னு நாம ஏறதுக்கே, நடு ராத்திரி ஆயிரும், ஒன்னும் பிரச்சனை இல்ல, சரியா மதியான சாப்பாடுக்கு வீடு போயிறலாம், தனியார் பஸ்ன்னா, தீபாவளிக்கு மொத நாள் பெர்மிட் இல்லாம ஏக பட்ட சுந்தரா ட்ரவல்ஸ் ஓடி கிட்டு இருக்கும். அதுல எதாவது ஒண்ணுல ஏறுனா, சொல்ல முடியாது அநேகமா “இந்திய தொலைக்காட்சிகளில் முதன்ன்ன்ன்ன் முறையாக” படம் போடறதுக்குள்ள வீடு போயிறலாம்)
“எரியற கொள்ளியா, காச்சுன கம்பிய” என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணி..ரெண்டுமே கொடுமைதான், இருந்தாலும் ரயில்னா நேரத்துலயாவது போயிரலாம்னு ரெண்டாவது ஆப்சனையே தேர்ந்து எடுத்திருவான்.
ஊர்ல இருக்கறவங்களுக்கு கெட்ட நேரம் தபால்ல வந்தா, நம்பாளுக்கு தந்தில வரும். சரியா அன்னிக்குன்னு பாத்து தான் வேல வந்து குமியும், அடிச்சு புடிச்சு கடைசி நேரத்துல பஸ்ச புடிச்சு போனா, நம்பாளுக்காக ஒரு நல்ல தரமான ட்ராபிக் ஜாம் காத்துகிட்டு இருக்கும்.
நேரம் ஆக ஆக ஹார்ட் பீட் ஏறும்…பட்டுன்னு பாதி வழில எறங்கி ஒரு ஆட்டோ புடிச்சு ஒரு வழிய ரயில்வே ஸ்டேஷன் போயி சேர்ந்திருவான். ரயில் வரதுக்குள்ள எப்படியாவது பிளாட்பாரத்துக்கு போயரனும்ன்னு அரக்க பக்க ஓடுவான்.
ஓடற அவசரத்துல யாராது ஒருத்தன் மேல மோதிருவான்.உடனே அவன் “கண்ண என்ன பொடனிலயா வெச்சிருக்கே”ன்னு ஒரு மில்லியன் டாலர் கொஸ்டியன் கேப்பான், “சாரி பாஸ்” அப்படின்ட்டு கீழ விழுந்த சோல்டர் பேக்க தூக்கிட்டு மறுபடியும் ஓடுவான்..
சரியா ரயில் வந்துகிட்டு இருக்கும் போது போயி சேந்திருவான். வண்டி வந்து நிக்க நிக்க அந்த எடமே கலவர பூமி ஆயிரும்..அடிச்சு புடிச்சு எல்லாரும் ஏறுவாங்க..
“டேய் ரமேசு இங்க வாடா”, மாப்ள அங்க ரெண்டு சீட் இருக்காடா “
“எலேய் சிவனாண்டி இங்கிட்டு வா”
“எண்ணே இங்க வாரியளா இங்கனக்குள்ள ஒரு சீட் இருக்கு “
“டேவிட்டு, இங்க ஒரு சீட் இருக்குடே, இந்தால வந்திரு”,
“எடோ, கோபி இவட வரூ”
அந்த ரெண்டு நிமிஷம் பல வட்டார மொழிகளும் நம்மாளு காதுல வந்து தேனா பாயும்…அந்த மியூஸிகல் சேர் போட்டில சந்தேகமில்லாம தோத்து போவான். பெர்த்துல ஏறி அதுக்குள்ளயே சில பேரு கர்சீப்ப மூஞ்சில மூடி தூங்கறா மாதிரி நடிக்க ஆரம்பிச்சிருவாங்க. பேக்க தூக்கி சைடுல லக்கேஜ் கேரியர்ல வெக்கலாம்னா, அந்த முக்கால் அடி கம்பிளையும் ஆளுக படுத்திருபாங்க. சரி தீபாவளி இப்பவே ஆரம்பிசிருசுன்னு நம்பாள் முடிவு பண்ணிருவான். பக்கத்துல யாராவது கிட்ட சொல்லிட்டு, அந்த அழுக்கு துணி பேக்க பாத்துக்க சொல்லிட்டு TTR பாக்கலாம்னு போவான் .
TTR என்ன பண்ணமுடியும் இவனுக்குத்தான் saturn Solid ஆ இருக்கே.,சீட் இல்லேன்னு சொல்லிருவாரு.
தலைய தொங்கபோடுட்டு திரும்ப இவன் காம்பார்ட்மண்டடுக்கு வந்து பாத்தா. அந்த கேப்புல புதுசா ஒரு அம்பது பேர் அந்த பொட்டிய ஆக்குபை பண்ணிருபாங்க..இவன் வண்டிக்குள்ள ஏற்றதே சிரமம்னு நெலம ஆயிரும். பேக் மேல ஒரு கண்ணு வெச்சுகிட்டே..விடியலை நோக்கி விநாடிய எண்ண ஆரம்பிச்சிருவான்…
வண்டி கெளம்பின உடனே உள்ள பாத்திங்கன்னா..பெர்த்துல கர்சீப் போட்டு மூடிருகரவங்களுக்கும சக பயணிகளுக்கு சண்டை வலுக்க ஆரம்பிக்கும்…
“எழுப்புங்க சார், அந்தாள, இவளோ பேர் நிக்க எடமில்லாம படியில தொங்கிட்டு வர்றாங்க , கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம நாலு பேரு உக்கார எடத்துல எப்படி நீட்டி படுத்துட்டு வரான் பாருங்கன்னு”…ஒருத்தர் ஆரம்பிப்பார்.
“வேணும்னா நீயும் ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்து எடம் புடிக்க வேண்டியது தான” (கர்சீபுக்குள்ள இருந்து கிட்டே) இவரு வண்டி கெளம்பும் போது வருவாராம், இவருக்கு எந்திரிச்சு எடம் குடுக்கணுமாம்.. போயா”
சண்ட முத்தி கடைசியா, படுத்திருகறவர் கால் பக்கத்துல ஒரு எடம் வாங்கி மேல ஏறி உக்காந்திருவார்.
நம்பாள் படி கிட்ட இருந்து கொஞ்ச கொஞ்சமா முன்னேறி ரெண்டடி நகருவான்..பக்கத்துல ஒரு ஆள் புல் சரக்குல இருப்பான்..
”சார், எப்பவுமே நான் ஜெனரல்ல போகும் போது லைட்டா ஒரு கட்டிங் உட்டுக்குவேன், எந்த டையர்டும் இல்லாம ட்ரேவல் பண்ணல்லாம் பாருங்க” ன்னு சொல்லிட்டு இவன பாத்து சிநேகமா புன்னகைப்பான். ஆள பாத்தா கட்டிங் கட்டிங்கா உட் மாதிரி இருக்கான், இவன பாத்து நாம சிரிச்சம்னா, சொந்த செலவுல நாமலே சூன்யம் வெச்சுக்கறா மாதிரின்னு ‘வி. ஜி. பி’ல வெறப்பா ஒருத்தர் நிப்பாப்ள இல்ல அந்த மாதிரி எந்த உணர்ச்சியும் கட்டாம நிப்பான் .
இன்னொருத்தர் பக்கத்துல பாத்தா, படிச்சவர் மாதிரியே இருக்காது ஆனா ஹிந்து பேப்பர் கைல வெச்சுகிட்டு நிப்பாரு..என்னடான்னு யோசிச்சுகிட்டு இருக்கும் போதே… “சார் கொஞ்சம் கால் எடுத்துக்கோங்க., நான் உள்ள போயிக்கறேன்”னு ஏதோ விசேஷ விட்டுக்குள்ள போற மாதிரி அந்த முக்கால் அடி கேப் இருக்கற சீட்டுக்கு அடியில மாயமா மறைஞ்சிருவார். அதுக்கப்பறம் தான் ரயிலுக்கும், நியூஸ் பேப்பர்களுக்கும் இடையில ஒரு நீங்காத பந்தம் இருக்குங்கறதே நம்பாளுக்கு புரியும்.
ஒரு ரெண்டு மணி நேரம் கால் வலிக்கு அப்பறம், ஒருத்தர் இரக்கபட்டு சீட்டு நுனில ஒரு ஓரமா எடம் குடுப்பாரு.. சந்தோசமா பத்து நிமிஷம் உக்காந்திருப்பான். திடீர்னு “சார் உங்க சூ சைஸ் என்ன எட்டா”ன்னு காலுக்கு கீழ ஒரு குரல் கேக்கும்.
ஆச்சர்யத்தோட கேப்பான் ” எப்படி சார் கண்டுபுடிசீங்க”
“யோவ் மூஞ்சிக்கு மேல வெச்சு தேச்சா தெரியாதா பின்ன, கால எட்ட எடுயா, வந்துடானுக”ன்னு சல்லுன்னு இவன் மேல எரிஞ்சு விழுவான்…மேனேஜர தவிர வாழ்கையில யாருமே அவன திட்டி இருக்க மாட்டாங்க..நம்பாள் ரொம்ப சோர்ந்து போயிருவான். அந்த பொசிசன்லையே ரொம்ப நேரம் ஒண்டிக்கிட்டு உக்காந்துகிட்டு இருப்பான்..
போதாக்கொறைக்கு எந்த நேரமும் இவன் பேண்ட்ல வாந்தி எடுக்கற மாதிரி இவன் காலுக்கு கீழ இன்னொரு குடிமகன் தலை எல்லாம் தொங்கி போயி உக்காந்துக்கிட்டு இருப்பார்.
சமயம் பாத்துட்டே இருப்பான். மேல பெர்த்துல இடம் காலியான உடனே மேல ஏறி உக்காந்துக்குவான். இவனுக்கு பின்னாடி ஒரு ரெட்ட நாடிகாரர் கட்டய சாச்சிருபார். இவனால அஞ்சு நிமிஷம் கூட கால மடக்கி உக்கார முடியாது, கொஞ்சம் நேரம் கால நீட்டி எதிர்த்த பெர்த்துல வெச்சுப்பான்.
கீழ இருந்து ஒருத்தர் சொல்லுவார் “தம்பி சூவ கழட்டி வைப்பா மண்ணு விழுகுதில்ல, கீழ இருக்கறவங்கள பாத்தா மனுசரா தெரியல”… (இப்ப நான் என்ன செய்யயயயயய…..)
சரி, இந்த ரண காலத்துலயும் ஒரு கிளு கிளுப்பா, பாட்டு கேக்கலாம்னா..அது பேக்ல இருக்கும் ஏறங்குனம்னா ஏற விட மாட்டானுக…சரி மொபைல்லையாவது பாட்டு கேப்போம்னு பாத்தா, சார்ஜ் பண்ண மறந்திருப்பான், செல்லு செத்து போயிருக்கும்..
லேசா வயத்த வேற கிள்ளும் அப்போதான், இந்த கூத்துல அவன் சாப்பட மறந்ததே தெரியும்.
மேல பார்த்து (சாமியத்தான்) ”செய்யுங்க, உங்கனால எவளோ முடியுமோ செய்யுங்கன்னு… நொந்துக்குவான் .
எப்படியோ மாத்தி மாத்தி கால வெச்சு உக்காந்து,ஏதாவது ஒரு பொசிசன்ல தூங்கி போயிருவான். நடு ராத்திரில முழிச்சு பாப்பான், எல்லாரும் அமைதியா ஒருத்தர் தோள்ள ஒருத்தர் சாஞ்சு படுத்துகிட்டு இருப்பாங்க..இவனுக்கு எதிர் பெர்த்துல சண்ட போட்ட அந்த ரெண்டு பேரும் ஒருத்தன் கால ஒருத்தன் கட்டி புடிச்சிட்டு, நேர் எதிரா படுத்திருபாங்க… உண்மையான சமத்துவபுரம் இந்த ஜெனரல் காம்பார்ட்மண்டதான்னு புரிஞ்சுக்குவான். வாழ்க்கைல நிரந்தரமா தூங்கற வரைக்கும் தான் ஒரு இடத்துக்காக(நிலைக்காக) அடிச்சிக்குறோம்ன்னு, வாழ்க்கையோட பல தத்துவங்கள அந்த அமைதி அவனுக்கு உணர்த்தும்.
ஊர் நெருங்க நெருங்க அவனுக்கு ஒரு முழு சீட் கெடச்சிரும்…விடியற்காலைல நல்லா தூங்கிட்டு வருவான்..
டுங் டூங்..
“யத்ரியோ கடி கரிபியா ஞான் கிஜியே…..”வண்டி எண் ஆறு ஆறு ஐந்து மூன்று”,
“டீ, காபி, டீ காபி”…. மணியை பாப்பான் இன்னும் ஒரு மணி நேரமி…..
“தம்பி, ஸ்டேஷன் வந்திரிச்சுப்பா”, ன்னு யாரவது எழுப்பி விடுவாங்க..
“தேங்க்ஸ் சார்”.. அப்டின்ட்டு வாய தொடச்சிட்டு, தலைய சீவுவான்..
“அடடா, மொபைல் வேற சுவிட்ச் ஆப்ல இருக்கு அப்பாவ வேற வர சொல்லிருந்தோமே”, அப்படின்ட்டு பிளாட்பாரத்துல எறங்கி மெதுவா அவர தேடிகிட்டே நடக்க ஆரம்பிப்பான்.
ஒரு அம்பது அடி தூரத்துலேயே அவங்கப்பா அவன கண்டு புடிச்சிட்டு வந்து மொதல்ல பேக்க வாங்குவார்.
“பரவால்ல இருகட்டும்பா”ன்னு இவன் சொன்னாலும் அவன் கிட்ட இருந்து வாங்கிட்டு.. “ரொம்ப கூட்டமா இருந்திருக்குமே, சீட்டு கெடச்சுதா, ஆமா ரொம்ப டல்லா இருக்கியே ராத்திரி சாப்டியாப்பா” ன்னு கேப்பார்.
“ம்ம்.. அதெல்லாம் சாப்புட்டம்பா”, ஜன்னல் சீட்டே கெடச்சுது, அத விடுங்கப்பா, அப்பறம் வீட்டுல எல்லாரும் எப்படி இருகாங்க”ன்னு முன்னெப்போதையும் விட பக்குவப்பட்டவனா பேசிக்கிட்டே சந்தோசமா குடும்பத்தோட தீபாவளிய கொண்டாட வேகமா நடைய போடுவான்.
பயணங்கள் எப்போதும் நம்மை பக்குவப்படுத்தும், அதுவும் விளிம்பு நிலை மக்களோடு இது போல் பயணிக்கையில், நம்மை சுற்றி இருக்கக்கூடிய வாழ்கை முறையில் இருந்து நாம் எவ்வளவு வித்யாசப் படுகிறோம் என்பதை உணர நல்லதொரு வாய்ப்பாக இருக்கும் .என்னை பொறுத்தவரை வருடத்துக்கு ஒரு முறையாவது, தனியாக முன்பதிவு செய்யாமல் பல தரப்பட்ட மக்களோடு பயணம் செய்ததால், யதார்த்த வாழ்வின் எளிமையும், சராசரி உலகத்…(வந்துட்டாருப்பா, மெசேஜ் சொல்றதுக்கு, இவரு பெரிய வெண்ணிற ஆடை மூர்த்தி மெசேஜ் சொல்லாம முடிக்க மாட்டாரு, போப்பா, எல்லாம் அவங்களுக்கு தெரியும்)…
My sincere thanks to my inspirers and well-wishers ‘Pinkuripukkal’ Praveen and ‘Veri goodra vellachaami’ Gowtham for proof reading this article.
Posted in கட்டுரை | Tagged பயணம் | 33 Comments »
நாம் எல்லோரும் நம் குடும்பத்தோடு சந்தோசமாக இருக்கும் இந்த வேளையில் எத்துனையோ பேர் இந்த பிரபஞ்சத்தில் அனாதையாக ஒரு உறவுக்கு ஏங்கிக்கொண்டு தான் இருப்பார்கள். அப்படி சிறு வயதில் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து அனாதையாக வாழ்ந்து ஒரு கட்டத்தில் தன் குடும்பத்தோடு சேரத் துடிக்கும் ஒரு இளைஞனின் கதை தான் இந்த திரைப்படம்.
சர வெடியுடன் அதிரும் மேளத்துடன் ஆரம்பிக்கிறது கதை. கதையின் நாயகன் ஒரு அநாதை. மார்க்கெட்டில் வொர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறான். எதோ ஒரு அரசியல் காரணத்துக்காக அங்கிருக்கும் கடைகளை மூட சொல்லி ரவுடி கள் சில பேர் பொது மக்களை துன்புறுத்த நமது நாயகன் கடைக்குள் வைத்து பூட்ட படுகிறான். ஆனால் அதிரடியாக கதவை வெல்ட் வைத்து வெளியே வந்து ரவுடிகளை துவம்சம் செய்கிறான். மக்கள் அவனை புகழ. சந்தோஷத்தில் கானம் இசைக்கிறான்.
இந்த கட்டத்தில் நமது கதையின் நாயகியை சந்திக்கிறான். அவர்களது முதல் சந்திப்பு மோதலில் தொடங்க அவளது தந்தையின் முன்னாலேயே அவளுக்கு அறிவுரை கூறுகிறான். பிறகு தொடர்ச்சியாக இருவருக்கும் சந்தர்பமாக மோதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவளின் தந்தை செய்யும் ஒரு சூழ்ச்சியின் மறுமொழியாக ஒரு திருமண நிகழ்ச்சியில் ஊரார் முன்னிலையில் தான் அவளை காதலிப்ப தாக கூறுகிறான். பிறகு நடக்கும் சம்பவங்களில் ஒரு கட்டத்தில் அவனது நல்ல மனது புரிந்து கொள்ள அவளும் அவன் மீது காதல் கொள்கிறாள்.
இவர்களின் காதல் வளர அவள் தந்தையும் இவர்கள் காதலுக்கு சம்மதிக்கிறான்.அவர்கள் தாய் தந்தையரை அழைத்து வர சொல்கிறான். நாயகியும் அவனிடம் தாய் தந்தையரை அழைத்து வருமாறு கூற அவன் தொடர்ச்சியாக மறுக்கிறான். அவளும் ஒரு கட்டத்தில் நீ ஒரு ஆனாதயா என்று கேட்டு விடுகிறாள். இல்லை என மறுக்கும் அவன் தான் ஏன் ஆனதையாக வாழ்கிறான் என்பதை விவரிக்கிறான்.
காட்சி பின்னோக்கி நகர, அவனது சிறு வயதில் தாய் தந்தை அண்ணன் தங்கை அனைவருடனும் சந்தோசமாக வாழ்கிறான், திருவிழாவில் தன் அண்ணன் ஒரு மா பெரும் தவறு செய்கிறான். அதற்காக இவன் தந்தையிடன் ஊரார் முன்னிலையில் அடி வாங்கு கிறான். அவமானம் தாங்க முடியாமல் ஊரை விட்டு ஓடி வருகிறான். நாயகி இவனது கதையை கேட்டு அவனை ஆறுதல் படுத்தி இவ்வளவு நாட்கள் ஆகி விட்டது.இனி அவமானத்தை மறந்து நீ ஊருக்கு போய் தாய் தந்தையரை பார்க்குமாறு கூறுகிறாள்.
சம்மதித்த அவனும் தன் சொந்த ஊருக்கு போகிறான். நேராக வீட்டுக்கு செல்கிறான். ஆனால் அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சொத்துக்களை அபகரித்து கொண்டு, ஒற்றை சொல்லால் தன் தந்தையின் உயிரை பறித்து, மகாலட்சுமியாக பாவிக்க வேண்டிய தன் தாயை மாட்டு கொட்டகையிலும், தன் அன்பு தங்கையை ஊருக்கு ஒதுக்கு புறமாக ஒரு குடிசை வீட்டிலும் கஷ்டப்பட வைத்து இருக்கிறான் தன் அண்ணன் என்பதை தன் நண்பர்களின் மூலம் அறிகிறான்.
தனது சொத்தை திரும்ப அடைந்து தனது தாயையும் தங்கையும் பழைய நிலைக்கு கொண்டு வந்த பிறகுதான் தான் யார் என்பதை அவர்களுக்கு தெரிய வைக்க போவதாக நண்பர்களிடம் சூளுரை க்கிறான். இதில் அவன் வெற்றி அடைந்து மீண்டும் தனது குடும்பத்தோடும் காதலியோடும் இணைகிறனா? என்பது தான் மீதி கதை.
2005 ஆம் ஆண்டு வெளியாகி தமிழகம் எங்கும் 100 நாட்களுக்கும் மேலாக ஓடி வெற்றி பெற்ற திரைப்படம் ‘சிவகாசி’. இந்த திரைப்படத்தை எழுதி இயக்கியவர் வெற்றி பட இயக்குனர் பேரரசு. இவர் நாட்டரசன் கோட்டையில் பிறந்தவர். ஊரின் பெயர்களை தனது திரைப்படங்களின் பெயராக வைப்பது தான் இவரது பாணி. cameo roleகளில் (திரை படத்தின் இயக்குனரோ, ஒரு பிரபலமோ ஒரே ஒரு காட்சியில் தோன்றுவது) நடிப்பதற்கும் இவர் பெயர் போனவர். யாரோ ஹாலிவுட்லில் கூட, ஆல்ப்ரட் ஹிட்ச்காக் க்காம் அவர் கூட இப்படி தான் தோன்றுவாராம்.
நான் பாட்டுல நிம்மதியா இருந்தேங்க. என் பிரண்டு ஒருத்தன் சும்மா எப்ப பாத்தாலும் உலக சினிமா, உலக சினிமான்னு உயிரை எடுப்பாங்க.. நான் அவன் கம்ப்யூட்டர்ல இந்த DVDய போட்டா…அனாவிசியமா என் சிஸ்டத்துல வைரஸ் எத்தற வேல வெசுக்காதேம்பான்.
ஆனா ஊனா மஜித் மஜிதி, இங்க்மெர் பெர்க்மென், விட்டோரியா டெசிகா, கீஸ்லோவெஸ்கி, அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்க்கி, ஸ்டேன்லி குப்ரிக், பெட்ரிகோ ஃபெலினி, ரோமன் போலன்ஸ்கி, வால்டர் செலஸ், பெட்ரோ அல்மதோவர், அகிராகுரசோவா, ரோபெடோ பென்கினி, ஜீன் பியேர் ன்னு வாயில நொலயாத டைரக்டருங்க பேரா சொல்லுவான். அப்பறம் மூச்சுக்கு முன்னூறு தடவ ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்க பத்தி பேசுவான், ரெம்ப நாள் அவரு அவங்க தாத்தான்னே நெனச்சேன். நானும் ஒரு நாள் டென்ஷன் ஆகி சரி ரெண்டு படத்த பாத்தர்ரதுன்னு உக்காந்து பாத்தேங்க…
Ladri di biciclette, (Bicycle theives) அப்படின்னு ஒரு இத்தாலிய படம், ஒரு ஏழையாம், சைக்கிள்ல தொலைச்சிர்றானாம் , அப்பனும் மகனும் பஜார்ல ஒரு நா பூர தேட்றானுகலாம் கடைசில சைக்கிளும் கெடைக்கலையாம் . என்னத்த படம் எடுக்கரானுகளோ…
அப்புறம் Bacheha-Ye aseman (Children of heaven)ன்னு இன்னொரு இரானிய படம், யாருப்பா அந்தாளு ம்ம், மஜித் மஜிதியாம், இந்தாள் பாருங்க எப்படி படம் எடுதிருக்கான்னு, ஏழை குடும்பமாம், அண்ணன், தங்கச்சியாம். தங்கச்சி shoe வ தெக்க போன அண்ணன் வார வழில தொலைச்சு புட்றானாம், அப்புறம் அவங்க வீட்டுக்கு தெரியாம அத அப்புடியே சமாளிச்சு, ஓட்ட பந்தயத்துல மூணாவது பரிசா ஒரு shoe தராங்கன்னு சொல்லி பல்ல கடிச்சுகிட்டு 10 கிலோ மீட்டர் ஓடி, தெரியாம் இந்த லூசு பைய முதல் பரிசா வேற வாங்கி… படம் எடுக்க தெரியலேன்னா சும்மா இருக்க வேண்டியது தான…கடுப்புகள கெளப்பிகிட்டு…இவங்களுக்கெல்லாம் படம் எடுக்க காசு குடுகறான் பாருங்க அவங்கள சொல்லணும்..
பின் குறிப்பு: தமிழ் படிக்க தெரியா விட்டாலும், என் பெருமதிப்புக்குரிய பிரிய இயக்குனர்கள் “மஜித் மிஜிதியும்”, “விட்டோரியா டெசிகாவும்” மன்னிப்பார்களாக!
நிறைய அன்பர்கள் வேண்டுகோளுக்கிணங்க, உங்கள் தெளிவுக்கு…
1. வஞ்ச புகழ்ச்சிக்காக, மேற்கூறிய இரண்டு படங்களும் காலத்தால் அழியாத பொக்கிஷங்கள்.
2. இந்த கட்டுரையின் நடை, உலக சினிமாவை எனக்கு அறிமுக படுத்தியவரும், “கல்லூரி” திரைபடத்தின் ஒளிப்பதிவாளரும், ஆனந்த விகடனில் “உலக சினிமா” கட்டுரை தொடர் எழுதியவருமான திரு.செழியன் அவர்களுடைய எழுத்து நடை ஆகும்.
Posted in திரைப்படம் | Tagged சினிமா | 23 Comments »
ஏய், பிரசாதத்த வாங்காம அங்க என்னத்த வேடிக்க பாத்துக்கிருக்க…
கவிதாவின் தலையை லேசாக தட்டினான் கதிர்..
குருக்களிடமிருந்து குங்குமத்தை வாங்கி நெற்றியில் கீற்றிட்டவளை அமைதியாக ரசித்தவன்…சரி, வா அந்த திண்டுல உக்காருவோம்…
அறிவிருக்கா, அப்போ எதுக்கு தலைல தட்டுனிங்க…
ஆமா, அவரு பாட்டுல நீட்டிகிட்டே நிக்கறாரு, உம்பாடுல எங்கயோ பாத்துகிருந்தா…ஹேய்.. தள்ளி உக்காரு, அங்க பாரு யாரோ விபூதிய கொட்டிருக்கான்…
ஏன் கதிர், அம்மா கிட்ட நம்ப விஷயத்த சொல்லனும்னு சொன்னியே, சொல்லிடியா…
ஆமா…சரின்னு சொல்லிடாங்க…சொல்ல மறந்துட்டேன்..
எவளோ முக்கியமான விஷயம்… இப்பிடி சொல்றிங்க
நீவேற… எனக்கு எப்படியோ, கல்யாணமானா போதும்னு இருக்காங்க…உங்கப்பா கிட்ட நேரம் பார்த்து பேச சொன்னாங்க…
ஹீம்ம்…..உங்கம்மா அப்படிங்கறாங்க ஆனா எங்கப்பாவுக்கு, தமிழ் சினிமால வர்ற மாதிரி USல எங்க சொந்தக்கார பையன் ஒருத்தன் இருக்கானாம்..அவனுக்குதான் கட்டி குடுக்கனும்னு எங்க பெரிப்பா கிட்ட பேசிக்கிட்டு இருந்தார்..
.
கதிர் சிரிக்க….
நான் சீரியஸாதான் சொல்றேன்…
என்னது சீரியஸா சொல்றியா, அடிப்பாவி இதையே சாக்கா வைச்சு என்ன கழட்டி விட்டுடாத… எனக்கெல்லாம் தாடி வேற சரியா வராது….
நாம லவ் பண்ண ஆரம்பிச்சு, ஆறு மாசமாச்சு எப்பபாரு நம்பிக்கையில்லாம இதையே சொல்லிக்கிட்டு இருங்க… கோபப்பட்டாள். பொண்ணுக முடிவெடுக்க ரொம்ப யோசிப்போம்… ஆனா முடிவெடுத்துட்டோம்னா அதுல இருந்து மாற மாட்டோம்….
என்ன திடீர்னு, தலைவர் மாதிரி பஞ்ச் டயலாக் பேச ஆரம்பிச்ட….
நான் சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன், உங்களுக்கு நக்கலா இருக்கா..
காமெடியா பஞ்ச் டயலாக் எல்லாம் நானா பேசுன்னேன்…
என் கவலை எனக்கு, இன்னும் ஒரு மாசத்துல எனக்கு காலேஜ் முடிஞ்சிடும், மீட் பண்ணறது ரொம்ப கஷ்டம்…அப்புறம் ஜூன் ஜூலைக்குள்ள கால் லெட்டர் வந்திருச்சுன்னா நான் சென்னை போய்டுவேன்…
சரி பொலம்பாத, எனக்கு மட்டும் அறிவில்லையா.. மெட்ராஸ்ல ரெண்டு மூணு கம்பெனில அப்ளை பண்ணிருக்கேன்..எதாச்சு ஒன்னுல கெடச்சிடும்….நீ மொதல்ல நம்ப விஷயத்த உங்கப்பா கிட்ட சொல்ற வழியப்பாரு…
இன்னும் கொஞ்ச நாள் இதே மாதிரி சுத்திகிட்டு இருந்தோம்னா, அவருக்கே தெரிஞ்சிரும்…
அடிப்பாவி, எதோ இந்த ஒரு மாசமா தான் வெளிய தனியா மீட் பண்றோம்..அதுவும் இங்க கோவில்லதான் பாத்துகறோம்..என்னமோ தெனமும் சினிமாவுக்கும், வைகை டேமுக்கும் போயிட்டு வர்ற மாதிரி சொல்லற…
அப்பறம் அடிக்கடி வீட்டுக்கு போன் பண்ணாதிங்க… போன ஹால்ல வேற வெச்சிருக்கோம்..ப்ரீயா பேச முடியாது..தேவை இல்லாம பிரச்சனை…
இது வேறயா, சரி ஓவரா உம் பகுமானத்தை காட்டாத… இனிமேல் நான் பண்ணல… மண்டையன் காறி துப்பறான்…இதுக்கு பேரு லவ்வான்னு..
அப்படியா சொன்னார், என்னால நம்பமுடியல.. என்கிட்ட எவளோ அமைதியா பேசுவாரு…
அவன பத்தி உனக்கு முழுசா தெரியாது..அவன் ஒரு பெரிய டெரர்…
கதிர், ரவியாவது என்னோட ரெண்டொரு வார்த்தை பேசறார். ஆனா செந்தில் ஏன் பேசவே மட்டேன்கறார்..
அவரு பொதுவாவே அப்படித்தான்… நாளாச்சுன்னா சரியாயிரும்..
சரி, நான் கெளம்பறேன் கதிர்.. என்னால நாளைக்கு கோவிலுக்கு வர முடியாது… சனிக்கிழமை பாக்கலாம்..
ம்ம்…சரி பாப்போம்…
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மாப்ள.. இனிக்கு சாயங்காலம் படத்துக்கு போலாம்டா, சேர்ந்து வெளிய போயி ரொம்ப நாளாச்சு..
என்ன சித்தப்பு போவமா…
ம்ம்.. போலாம்…சாயங்காலம் கடைக்கு வந்திருங்க…அப்புடியே போயிருவம்டா…
தியேட்டருக்கு கிளம்பும் சமயம்.
ஹலோ, ம்ம் சொல்லு..இப்போவா எத்தன மணிக்கு…சரி இன்னும் 20 நிமிஷம் கழிச்சு வரேன்…
மண்டையா, நான் வரலடா…
என்னாச்சு மாப்ள..
அவ கோவிலுக்கு கூப்றா..
என்ன பங்காளி.. இவன் திடிர்னு இப்புடி சொல்றியான்…
லேய்…இப்போ நீ வரியா இல்லையா…எவன் வந்தாலும் வராட்டியும்…நான் கெளம்பறேன்…
என்ன சித்தப்பு கோவிச்சுக்கற….
நான் எதுக்குப்பா உன்ன கோவிக்கணும்..உனக்கு முக்கியமான வேலை இருக்கும் போயி பாரு… டேய் நீ வண்டியில ஏறு…
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இரண்டு வாரங்களுக்கு பின் ஒரு நாள் மாலை.. வைகை புக் ஷாப்…
ஹலோ…சொல்லுடா கதிரு… பதட்டமாகி…. ஆமா நான் செந்தில்தான் பேசறேன்.. நீங்க யாரு… என்ன சொல்றிங்க, எப்போ சார்… கதிருக்கு என்ன ஆச்சு… இந்தா உடனே கெளம்பி வரேன் சார்…
என்னாச்சு பங்காளி…
நம்ப கதிருக்கு ஆக்சிடென்டாமுடா… அவன் செல்லுல இருந்து ஒருத்தர் கூப்புட்டாரு…
ஐயோ…அடி ஏதும் பலமான்னு கேட்டியா…
தெரியலடா, உடனே சாய்ராம் ஆஸ்பத்திரிக்கு கெளம்பி வரச்சொன்னாங்க…
எனக்கு பயமா இருக்கு பங்காளி, சீக்கிரம் வண்டி எடு.. நான் கடைய அடைக்கறேன் .
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அவசர சிகிச்சை பிரிவில் கதிர் படுத்திருக்க..அவனுக்கு முதலுதவி கொடுக்கப்பட்டு கொண்டிருந்தது..
அவனது வலது கால் நசுங்கி, பேண்ட் முழுவதும் ரத்த சகதியிலிருக்க நினைவிழந்திருந்தான்.
இந்த காட்சியை கண்டதும் மண்டையன், சித்தப்புவின் தோளில் சாயந்து தேம்பி அழ ஆரம்பித்தான்..
அவனை சித்தப்பு அமைதிப் படுத்திவிட்டு… கதிரை கொண்டு சேர்த்தவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு.. அவனது உடைமைகளையும், சிதிலமடைந்த அவனது வண்டியை சேர்த்திருந்த வொர்க் ஷாப் நம்பெரையும் பெற்று கொண்டு திரும்ப..
கதிரின் செல் மீண்டும் அடிக்க தொடங்கியது…
யாரென்று பார்க்க…கவிதா..
பேச விருப்பமில்லாமல், மண்டையனிடம் பேசக் கொடுத்து விட்டு டாக்டரை பார்க்க நடந்தான்..
முதலுதவி நடந்து கொண்டிருக்க…
நீங்கதான பேஷண்டோட ப்ரெண்டு… அவங்க பேரண்ட்ஸ உடனே வரசொல்லுங்க…
இல்ல டாக்டர், அவங்கம்மாவுக்கு இன்னும் தகவல் சொல்ல.. நீங்க என்கிட்டயே சொல்லுங்க…
என்னோட ரூம்ல வெயிட் பண்ணுங்க.. இதோ வந்தர்றேன்…
சித்தப்பு டாக்டரின் அறையில் 20 நிமிடங்கள் காத்திருக்க, டாக்டர் வேகமாக நுழைந்தார்
அவரின் பின்னால் அழுது சிவந்த கண்களோடு கவிதாவும்….மண்டயனும்,
இங்க பாருங்க… பேஷண்டுக்கு இம்மீடியட்டா… அப்பரெட் பண்ணி ஆகணும்…ரைட் லெக்ல க்ரஷ் இஞ்சுரி ஆகிருக்கு.. வலது கால முழங்காலுக்கு கீழ எடுக்க வேண்டியிருக்கும்….
என்ன டாக்டர் சொல்றிங்க…
ஆமா மல்டிபிள் ப்ராக்ச்சர்னா கூட பரவல்ல…இது க்ரஷ் இஞ்சுரி, எலும்பு சுத்தமா நொறுங்கிரிச்சு…
இதுக்கு வேற வழியே இல்லையா டாக்டர்..
ஆம்புட்டேஷேன் பண்ணி ஆகணும்..இல்லென பஸ் ஸ்ப்ரெட் ஆகி நெலம மோசமாகிடும்.. இன்னிக்கு நைட்டே ஆபரேஷன் ஆரம்பிக்கணும்…நீங்க உடனே பணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க..
பணத்த பத்தி பிரச்சனையே இல்ல டாக்டர், நீங்க ஆக வேண்டியத பாருங்க…
பதட்டமாகி வெளியே வந்தார்கள்…
கவிதா அழுகையை அடைக்க முடியாமல் அழுது கொண்டிருக்க….
பங்காளி… கதிர் அம்மாவுக்கு சொல்லிரலாமா….
சொல்லலாமா, வேண்டாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்… எப்புடினாலும் சொல்லித்தான் ஆகணும்..எனக்கு என்ன செய்யரதுண்டே புரியல.. இவன்கிட்ட படிச்சு படிச்சு சொன்னேன்.. வண்டிய ஒழுங்கா வெச்சுக்கோடா.. அப்பபோ சர்வீஸ்க்கு விட்றா… ம்ஹும்… அக்கறையே இருந்ததில்லை… அந்த பிரேக்க கூட ஒழுங்கா வெச்சிருந்தது கெடயாது.. இப்போ பாரு..அவங்கம்மாவுக்கு நாம என்னாண்டு பதில சொல்றது…
பேசிக்கொண்டே இருந்த சமயத்தில்…
பங்காளி அந்த பிள்ளைய காணோம்…
ம்ஹ்ம்…விரக்தியாய் சிரித்தான்..இனிமேல் நாம அந்த பிள்ளைய பாக்கவே மாட்டோம்ன்னு நெனைக்கறேன்…. எங்கப்பன் பாய்சன் அடிச்சிருவேங்கறான், பாயாசம் சாப்புட்டுருவேங்கறான்னு அப்பிடியே கட்டய, குடுத்துட்டே கம்பிய நீட்டிருவாளுக..
சும்மா இரு பங்காளி, அந்த பிள்ள அப்படியெல்லாம் பண்ணாது…
லேய்..நடக்கற கதைய பேசுடா… எனக்கு இவன் வாழ்கைய நெனைச்சாத்தான் கவலையா இருக்கு… இன்னும் அவங்கம்மா கிட்ட எப்படி சொல்லப்போறம்னு தெரியாது… ஒன்னும் புரியல…
ஏம்பங்காளி, எந்த வண்டி அடிச்சிதுன்னு தெரியலையா…
அவுங்கெல்லாம் வரும்போதே அடிபட்டு கெடந்திருக்கான்… அவன் முழிச்சாத்தான் தெரியும்..சரி நீ இங்கயே கூட இரு… நான் போய் பணத்த பெரட்டிட்டு வாறேன்…
எவளோ தேவைப்படும் பங்காளி…
அத வேற கேக்கலையே.. எப்டியும் 50 க்கு மேல ஆயிடும்.. விடு.. அந்த காஸ் ஏஜென்சிக்காக வெச்சிருந்தத வெளிய ரொட்டேசன்ல விட்ருக்கேன்.. அவசரத்துக்கு ‘முத்தூட்’ ல வாங்கிட்டு கூட அப்பறமா மாத்தி விட்டுக்கலாம்…சேரி நீ உள்ள போ நான் அவிங்கம்மாவுக்கு போன் பண்ணிட்டு, ரெண்டு மண்நேரத்துல பணத்தோட வர்றேன்… டாக்டர் கிட்ட ஒரு வார்த்த சொல்லிரு.. அப்புடியே 50 ஆயிரம் போதுமான்னு கேட்டுட்டு செல்லுக்கு அடி சரியா…
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஒரு வழியாக கதிரின் அம்மாவுக்கு திணறித்திணறி விஷயத்தை சொல்லி விட்டு, ஏற்பாடு செய்த பணத்தை கவுண்டரில் கட்டி விட்டு…கதிரை அட்மிட் செய்திருந்த அறைக்கு சென்றவனுக்கு மெல்லிய அதிர்ச்சி..
கதிர் இன்னும் மயக்கத்தில் இருக்க… அவனையே பார்த்து கொண்டு, அருகே கவிதா அமர்ந்திருந்தாள்..
திரும்பி மண்டயனை தேட.. வராண்டாவின் மூலையில் நின்று கொண்டிருந்தவனிடம் சென்றான்.
என்ன பங்காளி, பணத்த கட்டிடியா…
40 ஆயிரம் கட்டிருக்கேன், அப்புறமா டாக்டர்கிட்ட பேசிக்கலாம்..எப்படியோ கதிரம்மா கிட்ட விஷயத்த சொல்லிட்டேன்.. இப்போதைக்கு லேசான அடின்னு தான் சொல்லி சமாளிச்சிருக்கேன்..கெளம்பி வந்துட்டிருக்காங்க…
சின்ன மௌனத்துக்கு பிறகு….
ஆமா, என்னடா இந்த நேரத்துல அந்த பொண்ணு இங்க வந்து உக்காந்திருக்கு…
என்னமோ சொன்னியே பங்காளி…அந்த பொண்ணு, இனிமேல் வாழ்ந்தா இவனோடதான்னு அவங்கப்பா கிட்ட சண்டைய போட்டு கெளம்பி வந்திருச்சு..
சித்தப்பு பதிலேதும் கூற முடியாமல், தவறாக நினைத்து விட்டோமே என்று வெட்கபட்டு உறைந்து நிற்க..
தன் ஒரே அன்பு மகளின் காதலை ஏற்றுக்கொண்டு ரிஷப்சனில் கவிதாவின் அப்பா, கதிரை பற்றி விசாரித்து கொண்டு இருக்க…
கதிரின் எதிர்காலம் குறித்து மண்டையன் மனதுக்குள் நிம்மதி அடைய..
காரணம்.
கவிதாவும்….காதலும்!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பின்குறிப்பு:
சித்தப்புவிலிருந்து, என்னிலிருந்து சமீபத்திய சுப்ரமணியபுரம் வரை பொதுவாக பெண்களின் காதல் மேல் இந்த சமுதாயத்தில் ஒரு இரண்டாந்தரமான பார்வையே இருந்து வருகிறது. ஆனால் எல்லோருமே அவ்வாறு இருப்பதில்லை என்பதற்கு கவிதாவும் ஒரு உதாரணம்.
இந்த கதையின் கரு, என்னை மிகவும் பாதித்த என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவம்.
Posted in கதை | Tagged தொடர்கதை | 31 Comments »
ஆனாலும் அவளை பார்க்காதவன் போல் தீவிரமாக ஆ.வி ஐ படிக்க ஆரம்பித்தான்…
ஹலோ, கதிர்..
நிமிர்ந்து..
கவிதா..
போலியாக ஆச்சர்யம் காட்டினான்…..
நீங்க எங்க இங்க… உங்க கடையா?
இல்ல, ஆனா அப்படி தான்…
என்ன கொழபறிங்க….எதாவது ஒன்ன சொல்லுங்க….
என்னோட பிரண்ட் செந்திலோட கடை, நாங்க எல்லாரும் ஒண்ணா தான் தங்கியிருக்கோம்…அதான் அப்படி சொன்னேன்… சிரித்தான். ..பசங்க வெளிய போயிருக்காங்க சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும்…
பிரிவோம் சந்திப்போம் புக் இருக்கான்னு பாக்கலாம்னு வந்தேன்..
ஓ… அது ஸ்நேகாவோட படமாச்சே.. அந்த புக்கா…
இல்லைங்க இது நம்ப சுஜாதா 80ல ஆனந்த விகடனில் தொடர்கதையா எழுதின ஒரு அற்புதமான ரொமான்டிக் ஸ்டோரி…
ம்ம் நானும் கேள்வி பட்டிருக்கேன்..அந்தம்மா எவளோ பெரிய ரைட்டர்..
அவனை அறியாமல் சேற்றை வாரி சந்தோசமாக அப்பிகொண்டான்.
அவள் பலமாக சிரித்தாள்… உங்க பிரண்ட நெனச்ச பாவமா இருக்குங்க…
ஏங்க…
இல்லங்க உங்கள நம்பி கடைய விட்டு போயிருக்காரே….அதன் சொன்னேன்..சுஜாதாங்கறது மேல் ரைட்டர் தாங்க..அது அவுங்க மிஸ்சஸ் பேரு.. சரி நீங்க சிரமப்பட வேண்டாம் நானே தேடிக்கறேன்…
பேசாம இருந்திருக்கலாம் போலேயே…ஒரு கதவ தெறந்தா ஆண்டவன் இன்னொரு கதவ மடார்ன்னு சாத்திப்புட்ரானே…என எண்ணிக்கொண்டு..
பா.விஜய், தபுசங்கர் புக்கெல்லாம் அந்த கடைசி ராக்ல இருக்குங்க…
நான் இன்னும் அவங்க புக்கெல்லாம் படிக்க ஆரம்பிக்கலைங்க…
அவள் தேடி இரண்டு பாகங்களையும் எடுத்து கொண்டாள்..
நான் ரொம்ப ரேரா தாங்க படிப்பேன்…அசடு வழிந்தான்.
பரவா இல்லைங்க…ஆனா கண்டிப்பா இந்த மாதிரி புக்க படிங்க..உங்களுக்கும் புக்ஸ்ல ஆர்வம் வந்திரும்..என்று பணம் கொடுக்க முற்பட்ட போது…
அட இருங்க, மொத மொதல்ல கடைக்கு வந்திருக்கிங்க என்ன சாப்டறிங்க…
ஹையோ…எனக்கு ஏதும் வேண்டாங்க…
சும்மா இங்கிட்டு உக்காருங்க கவிதா..நான் ரெண்டு நிமிசத்துல வந்தறேன்…
இரண்டு மாஸாவோடு வந்தான்….
இப்படி வர்ற கஸ்டமருக்கெல்லாம் செலவு பண்ணா கடை பனால் தான்…
எல்லாதுக்குமா பண்ணுவாங்ய ….ஸ்பெஷலானவங்களுக்கு மட்டும்தான்… உரிமையாடு புன்னைகைத்தான்…
ஏற்றுக்கொண்டாள்..மாஸாவையும்
எப்பவுமே அப்பாதான் புக்ஸ் வாங்கிட்டு வருவாரு இன்னிக்கு பேங்க் ஆப்-டே அதான் சரி நானே வாங்கிக்கலாம்னு…
எந்த பேங்குல இருக்காரு ..
இங்க தான் பக்கத்துல கோ-ஆப்ரடிவ் பாங்க்ல கேசியரா இருக்கார்..
அம்மா என்ன பண்றாங்க…
அம்மா ஆறு வருசத்துக்கு முன்னாடியே தவறிட்டாங்க…
மன்னிச்சிருங்க கவிதா..
பரவால்லங்க… நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு..அப்பா செல்லம்..உங்களுக்கு நேடிவ்வே இதானா கதிர்?
இல்லங்க கரூர், நான் சின்ன வயசா இருந்தப்பவே, அப்பா எறந்துட்டாரு…வீட்டுல நானும் அம்மாவும்தான்…
அவளோடு பேசியபடியே, நல்ல்ல்ல்ல்ல கூலிங்காக வாங்கி வந்த 300 ml மாஸாவின் (ஏன்ணே, இதுக்கும் பெருசா இல்லையா? ) அளவு குறைவதை கண்டு மனதுக்குள் மிகவும் வருந்தினான்.
எத்தனையோ நாள் தான் லீவ் போட்டிருந்தாலும்..இந்த லீவுக்குதான் மிகப்பெரிய அர்த்தம் இருப்பதாக எண்ணி மனதுக்குள் மாக்கோலம் வரைந்து கொண்டிருந்த நேரத்தில் மின்னலென சித்தப்புவும் மண்டயனும் கடைக்குள் நுழைந்தார்கள்.
எலேய், வண்டில பிரேக்க டைட் பண்ண மாட்டியா சாகத்திரிஞ்சமுடா….
நீ எதுக்கு என் வண்டிய எடுத்திட்டு போனே…அதெல்லாம் ஒரு நேக்கா அமுக்கணும் சித்தப்பு…
நல்ல நேக்க கண்ட போ..
சித்தப்பு, இவங்கல ஞாபகம் இருக்கா..கவிதா இவரு தான் செந்தில் நான் சொல்லல இந்த கடையோட ஓனர். இவன் ரவி…
உனக்கு இப்ப காயமெல்லாம் ஆறிருச்சாமா …
அதெல்லாம் அப்பவே சரியாயிரிச்சு…என்று எழுந்தவள் இந்தாங்க ரெண்டு புக்ஸ் எடுத்திருக்கேன் என்று பணத்தை கொடுத்தாள்.
சரி நான் வர்றேங்க..பாக்கலாம்..
இந்தாமா புஸ்தகத்த மறந்துட்டு போற…
தேங்க்ஸ்ங்க செந்தில் …
நீங்க சைக்கிள்லையா வந்திங்க…
இல்ல கதிர், அன்னிக்கு என்னோட வண்டி சர்வீஸ்க்கு விட்டிருந்தேன், அதனால சைக்கிள்ல வந்தேன் ..
ஓஹோ..சரி பாத்து பத்திரமா போங்க..
அதான் நீங்க இங்க இருக்கிங்களே…
எங்க நீங்க அன்னிக்கு ராங் சைட்ல வந்திட்டு..என்ன சொல்றிங்களா.. என்று சிரித்து விட்டு கடைக்கு வெளியே வந்து
ரவி, நம்ப வண்டிய ஓரமா போடு அவங்க வண்டிய எடுக்கட்டும்..
இந்தா வாறேன் மாப்ள…
அவள் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு மறையும் வரை வேடிக்கை பார்த்துக்கொண்டு கடைக்குள் நுழைந்தவனுக்கு விசாரணை கமிசன் காத்திருந்தது.
என்னையா அதுக்குள்ள வந்துட்டிங்க….
அந்தாள் எங்கள வரச்சொல்லிட்டு எங்கயோ தொலஞ்சிட்யான்…
மாப்ள, சரி அதெல்லாம் இருக்கட்டும்டா…இது என்னதிது..
பைக் சாவி…
நான் அத கேக்கலடி மாப்ள, நீ இதுக்கு தான் லீவு போட்டியா..
டேய்.. நீ வேற, இது தற்செயலா நடந்ததுடா…
நீங்க ரெண்டு பேரும் செட்டாயி உக்காந்திருந்த சைச பாத்தா அப்படி தெரியலையே…
பாத்தியா பங்காளி மாஸா..நீயும் தான் இருக்கியே என்னைக்காவது எனக்கு வாங்கி குடுத்திருப்பியா?
என்னைய எதுக்கு கொடயற, அவன கேக்க வேண்டியது தானே….
அவன் எங்க நாம சொல்றத கேக்கறான்..அங்கிட்டு பாரு எதோ இன்ஸ்பெக்சனுக்கு வந்தா மாதிரி புக்க நோண்டிகிட்டு இருக்கறத..
ஏன் சித்தப்பு சுஜாதாவோட பிரிவோம் சந்திப்போம் இன்னொரு காப்பி இருக்கா..
என்ன திடீர்னு சுஜாதாவோட புக்க பத்தியெல்லாம் கேக்கற
இல்ல, படிக்கலாம்னு தான்.
ஏம்பா அதெல்லாம் தான் என் பழக்கமாச்சே உனக்கெப்புடி வந்துச்சுப்பா?
நம்ப கடைல இருக்கா இல்லையா…
பங்காளி, எடுத்து குடுத்திரு இல்லென இப்பவே மதுரைக்கு வண்டி ஏறிருவான் போல…
அது வீட்டுலதாண்ட கெடக்கு, நான் போன வாரந்தான் படிச்சு முடிச்சேன்…
எனக்கு தெரியும் சித்தப்பு, நீ தங்கம்னு…
இப்புடி ஒரே அடியா பொங்கரானே…அந்த புக்ல என்ன விஷேசம் பங்காளி…
தெரியல… இப்போ கொஞ்ச நேரத்துக்கு முந்தி, இதே புக்குதான் ஸ்கூட்டில போச்சு…
அதானா சங்கதி..அப்ப சரி..
சும்மா பேசிக்கிருக்காம வெரசா கெளம்புங்க….. ரூமுக்கு போயி சாப்புட்டு ரெஸ்ட் எடுக்கலாம்…
என்ன மாப்ள, படத்துக்கு போகணுமுன்ட..
இல்லடா மண்டையா, எப்பவாச்சுதான் லீவே போடறேன்…நல்ல ரெஸ்ட் எடுக்க வேண்டாமா.. ஏன் சித்தப்பு புக்கு வீட்டுலதான இருக்கு…
@@@@@@@@@@@@@@@@@@@@
இதற்க்கு பின் அவளை சந்திக்கும் வாய்ப்பை அடிக்கடி ஏற்படுத்தி கொண்டான்.அவள் கல்லூரி, பாட்டு வகுப்புக்கு சென்று வரும் நேரங்களை பெரும்பாலும் பயன்படுத்திக்கொண்டான்.
தேனீ பெயரளவிலேதான் மாவட்டம், மற்றபடி மிக சிறிய டவுன். ஆதலால் இவர்கள் சந்திக்கும் வாய்ப்பு அதிகரிக்க ஆரம்பித்து, நெருக்கமும் வளர்ந்தது.
இதை மண்டையன் ஆதரிக்கவும், நாசுக்காக சித்தப்பு கண்டிக்கவும் தவறவுமில்லை.
கவிதா, இந்த சண்டே நீ ப்ரீயா..
ஏங் கதிர்,
அன்னிக்கு என்னோட பர்த்டே, அதனால இங்க போடிக்கு பக்கத்துல இருக்கற ஒரு ஹோம்ல சில்ரன்ஸ்க்கு புட் பீட் பண்ண போறோம். நீயும் வரணுங்கறது என்னோட விருப்பம்.
கைய குடுங்க..அட்வான்ஸ் விஷ்ஸஸ், நல்ல விஷயம் கண்டிப்பா போறோம்..
@@@@@@@@@@@@@@@@@@@@
மண்டையா, இவ எங்கடா இங்கிட்டு வந்த…பொறந்த நாளதுவுமா வாயில விழுகரானே..
ஸ்கூட்டியை விட்டு இறங்கியவள் சிநேகமாய் புன்னகைத்தாள்
வாங்க..அசடு வழிந்து சிரித்தான் மண்டையன்
செந்தில், நான் என்ன ஹெல்ப் பண்ணட்டும் சொல்லுங்க..
நீ சிரமப்பட வேண்டாம்மா நாங்களே பாத்துகறோம்..
சித்தப்பு கவிதா கிட்ட ஸ்வீட் பாக்ஸ் குடுயா.. கவிதா, கொழந்தைங்களுக்கு நீதான் ஸ்வீட்ட குடுக்கணும்…
அமைதியாக குனிந்தது திரும்பி…என்ன பங்காளி, ஓம்மூக்க காணோம்…
நடத்துங்கடா, எம்புட்டு நாளைக்குன்னு நானும் பாக்கறேன்
@@@@@@@@@@@@@@@@@@@@
பின்பு நல்லதொரு நாளின், ராகு காலத்தில்…
கவிதா, எப்படி ஆரம்பிகறதுன்னு தெரியல…என்ன கல்யாணம் பண்ணிக்குவியா..
?? ?? ?? ?? ?? ?? ?? ?? ?? ?? ??
Posted in கதை | Tagged தொடர்கதை | 13 Comments »
யோவ், என்னையா நடந்திச்சு…. வாயத்தொறந்து பேசுயா…. டே மண்டையா நீயாவது சொல்லுடா….
அரை நிமிட மௌனம்…. சித்தப்பு நீயாவது தயவு செஞ்சு சொல்லுயா…
அவனையே கேளு, என்ன பண்ணிருக்யான்னு……
ஏன்யா என் உயிரை வாங்கறிங்க…. அப்படி என்னதான்டா பண்ண?
சார், இனிக்கு வேலைக்கு போனாரான்னு கேளு?
அவன் காலைல கெளம்பி போனதத்தான் நான் பாத்தேனே….
வேலைக்கு போனான் சரி, எந்த வேலைக்கு போனான்னு கேளு…
அவனுக்கென்ன ஆறேழு வேலையா இருக்கு, பொடி வெக்காம விஷயத்த சொல்லுயா….
அவன் யுனிவெர்சிட்டிக்கு வேலைக்கு போயி நாலு நாளாகுது, அந்த டெம்ப்பரரி போஸ்டிங்க எடுத்திட்டாங்கயலாம்.இவரு நமக்கெலாம் பாரமா இருக்க வேண்டாம்ன்ட்டு, சென்றிங் வேலைக்கு போயிருக்காரு….
என்னையா சொல்ற, கம்பி கட்ற வேலைக்கா போனான்….ஏன்டா,என்னடா இதெல்லாம்…
இல்ல மாப்ள…
என்னடா…..சும்மா வாய் வார்த்தைக்கா நாம பழகறோம்…உன்ன என்னிக்காவது,எதுலயாவது விட்டு குடுத்திருக்கோமா…உன்ன கூலி வேலைக்கு போக….
கதிரு, சும்மா எதுக்கு பேச்ச வளத்துகிட்டு, ரவி சார், என்ன செய்யராரோ..அதுபடி செய்யட்டும்…ஆனா எங்கயாச்சு, பங்காளி மாப்ளன்ட்டு மறுபடி பசப்பரத பாத்தேன், கொல விழுகும் ஆமா சொல்லிட்டேன்…
அட நீ இரு சித்தப்பு….நான் பேசிக்கறேன்…
பின்ன என்னடா, இவனுக்கு முன்னாடி ஒரே ஒருநாள் நாம சாபுட்ருப்போமா..எதுலயாவது பிரிச்சு பாத்திருப்பமா… இவரு பெரிய தியகியாட்டமா…வேண்டாம்டா ஒரே பேச்சு, சார் அவரு இஷ்டபடி என்ன வேணுமோ செஞ்சுக்கட்டும்…
இல்ல பங்காளி..
நீ பேசதேன்னேன்..
நான் பண்ணது தப்புதான், எதோ ஒரு உணர்ச்சி வேகத்துல அப்படி பண்ணிபுட்டேன் பங்காளி…மாப்ள நீயாவது சொல்லு மாப்ள…
விடு சித்தப்பு, அவன் அழுதாத்தான் நீ விடுவியா…. அட பேசுயா…
சரி இப்போ சொல்றன்டா, நாங்க சொல்றத கேட்டுட்டு இங்க இருக்கற மாதிரி இருந்த இரு..இல்லேனா அப்பறம் உன் சௌரியம்
சரி பங்காளி… அதான் கேக்கறேன்டன்ல…
நான் கேஸ் ஏஜென்சி போடலாம்டு இருக்கேன்..அது சம்பந்தமா நான் கொஞ்சம் அலைய வேண்டியிருக்கும்..நீ SI செலெக்ஷன் போற வரைக்கும்..கடைல ஒத்தாசையா என்னோடையே இரு…
சரி, இவளோதான, விடு பங்காளி இருந்துட்டா போகுது…
சூழ்நிலை சரி இல்லாததால் கவிதா விஷயத்தை தற்காலிகமாக தள்ளிப்போட்டான் கதிர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அண்ணே, ரெண்டீய… ம்ம் மூணு டீய குடுத்து விடுங்க…என்று விட்டு வைகைக்குள் நுழைந்தான்.
சித்தப்பு, மளிகைசாமா வேற தீர்ற மாதிரி இருக்கு.. இன்னிக்கு சாயங்காலம் வாங்கிருவோம்….
ம்ம்… சரிடா
என்ன மாப்ள, இன்னிக்கு வேலைக்கு போகலையா…
இல்ல, லீவ் போட்டு ரொம்ப நாள் ஆகுது…அதான் இன்னிக்கு பாடிய ரெஸ்ட்ல போடலாம்டு..ஏன்னா இன்னிக்கு போட்டம்னா, நாளைக்கு ஞாயிரும் சேத்து ரெண்டு நாள் லீவ் இல்ல…சரி இந்தா தம்ம பத்த வெய்….
லேய், கடைக்குள்ள அடிக்காதிங்கடா….
இது எப்ப இருந்துயா..உம் பகுமானத்துக்கு அளவே இல்ல. எல்லாம் நாளைல இருந்து பாக்கலாம்….நீ பத்த வைடா… என்னத்தயா சும்மா படிச்சுகிட்டு இருக்க..
காரல் மார்க்சும் கம்யூனிசமும்….
ஆமா… என்னையா, புக் வாங்கி வெச்சிருக்க….பேரறிஞர் அண்ணாவின் பேருரைகள், சேகுவேராவின் கொரிலா தாக்குதல்…பாரதிதாசன் பாடல்கள்…எவன் வாங்குவான்….ஒரு தபுசங்கர்ரோட தேவதைகளின் தேவைதை,பா.விஜயோட “திமிரழகி”, காதல் படிகட்டுகள் இந்த மாதிரி புக்க வாங்கி வைக்க மாட்டியா….
இப்போ உனக்கு என்ன பிரச்சனை, என்னிக்காவது கடைல வந்து ஒரு புக்க பொறட்டி இருந்தா தெரிஞ்சிருக்கும்… நீ சொல்றதெல்லாம் அந்த கடைசி ராக்ல இருக்கும் பாரு…
அட சும்மா உன்ன டெஸ்ட் பண்ணே சித்தப்பு, மண்டையா என்ன கடை ஒன்னும் கள கட்டலியே…பக்கத்துல தளபதி மியூசிகல்ஸ்ல சொல்லி நல்ல 80ல வந்த இளையராஜா ஹிட்ஸ்ச போட சொல்லு….
எதுக்கு இப்படி சம்பந்தமில்லாமல் சலம்பிக்கிருக்க..நாலு நாளாவே உம்போக்கு சரியில்லையே..
அதெல்லாம் ஒன்னும் இல்ல சித்தப்பு….சரி காதலைபத்தி நீ என்ன நெனைக்கற..
கையைக்கட்டி கல்லுகக்குழில குதிக்கறத பத்தி நீ என்ன நெனைக்கற..
என்ன சித்தப்பு பொசுக்குனு, இப்பிடி சொல்லிபுட்ட
மாப்ள, அப்படியா சங்கதி, யார்ரா அந்த ஜாரி….
அப்படியெல்லாம் சொல்லாதடா ரவி….
என்ன மாப்ள, புதுசா ரவின்னு பேரு சொல்லி கூப்படற…உனக்கு என்னடா ஆச்சு…
நான் கவிதாவ மறுபடி பாத்தண்டா..
கவிதாவா?…
இது என்ன புது கதையா இருக்கு, பங்காளி
என்ன கேட்டா, எனக்கென்ன தெரியும்..வேறொன்னுமில்ல நாலு நாளைக்கு முன்னாடி தன் உனக்கு வேப்பெலை அடிச்சுது, அவனுக்கும் அடிச்சா சரியாயிரும் ….
சரி சித்தப்பு, நான் நேரடியவே சொல்லிறேன்.. அன்னிக்கு நாம இடிச்சுப்புட்டம்ல… அந்த பொண்ண நான் மறுபடி பத்தர ஆபிஸ் ஸ்டாப்ல வெச்சு பாத்தேன்….நல்ல பேசுனா…என்னமோ தெரியல… இனி அவளோட தான் வாழணுமுன்னு முடிவு பண்ணிட்டேன்.
அதான் முடிவு பண்ணிட்டயில்ல.. அப்பறமென்ன..நாளைக்கே ரூம காலி பண்ணிட்டு தனிக்குடித்தனம் போயிரு.
அட நீயென்ன பங்காளி, அவன் இப்படி ஒரு நல்ல விஷயத்த சொல்றான்… நீ என்னமோ இப்பிடி பேசிக்கிருக்க…
டேய், ஒருத்தன் தெரியாம குழில விழுந்துட்டா கைய குடுத்து காப்பாத்தலாம்…அவன் கைத்தக்கட்டி எறங்கிட்டு இருக்யான் அவன ஒன்னும் பண்ண முடியாது… பொட்டச்சிய நம்பி போகாத கதிரு, கடைசில சட்டைய கிழிச்சிட்டு தான் திரியப்போற…
விடு மாப்ள, பங்களிக்கு வயசாயிரிச்சு. இப்படிதான் எதையாவது சொல்லிகிருப்பாப்ல …
அமாண்டா எனக்கு வயசாயிரிச்சு, இவிங்க ரெண்டு பேருக்கும் நாளைக்கு காலாண்டு பரிச்சை…… பாத்து படிங்கப்பா…
அந்தாள் கெடக்கறான், நல்ல விஷயம் மாப்ள…விடு அமச்சுருவோம்.
நீங்க அமைக்கறது இருக்கட்டும்..மொதல்ல சிகரட்ட அமத்திட்டு வாங்கடா….டீ ஆறுது
டீ குடித்து முடித்த பிறகு…
கதிரு கடைல இரு, நாங்க கொஞ்சம் வெளிய போறம்….
யோவ் சீக்கிரம் வாங்கையா..எவளோ நேரம் விட்டத்தையே பாத்துட்டு உக்காந்திருக்கறது….
அதன் இம்புட்டு புக் இருக்கில்ல…எதாவது எடுத்து படிச்சிக்கிருக்க வேண்டியது தானே….
நமக்கும் அதுக்கும் ரொம்ப தூரம்யா…அதெல்லாம் உன்னோடயே வெச்சுக்கோ….மண்டையா அந்தாள வெரசா கூட்டியாந்திரு…நாம மதியம் எதாச்சும் படத்துக்கு போலாம்…
சரி மாப்ள…
அவர்கள் போன பிறகு…ஜன்னலை திறந்து பக்கவாட்டில் இருந்த மியூசிகல்சில் குரல் குடுத்தான்…
சுந்தரண்ணே, ரெகார்டிங் பண்ணது போதும்ணே….செத்த நேரம் எதாச்சு பாட்டப் போடறது….
யேய்..இன்னிக்கு வேலைக்கு போலயாப்பா….சரி ரெண்டு நிமிஷம் இந்த கேசட் முடிஞ்சரட்டும் போட்ருவோம்..
ஆனந்த விகடனில் சினிமா சம்பந்தமான செய்திகளை,கட்டுரைகளை தேடித்தேடி படித்து கொண்டிருந்தான்….
எதேச்சையாக நிமிர்ந்தவன், காலண்டரை பார்காமலே 11ல் இருந்து நல்ல நேரம்தான் என்று உணர்ந்து கொண்டான்.
கடைக்குள் கவிதா…
“உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே…என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே.”
சுந்தரண்ணே சூப்பர்ணே…
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Posted in கதை | Tagged தொடர்கதை | 17 Comments »