Feeds:
Posts
Comments

Archive for the ‘திரைப்படம்’ Category

 

வால்ட் டிஸ்னி மிகவும் கொடுத்து வைத்தவர், ஏனெனில் எப்போது பிடிக்கவில்லை என்றாலும் நடிகர்களை கிழித்து எரிந்து விடுவார்.

– ஆல்ப்ரெட் ஹிட்ச்காக்

hitchcock

பெரும்பாலும் “மெக்குஃபின்” யுக்தியை தனது திரைபடங்களில் பயன்படுத்தி,  அதை பிரபலப்படுத்தியவர் ஹிட்ச்காக்.

McGuffin (மெக்குஃபின்) என்றால் என்ன?

பார்வையாளரை ஈர்க்க/கட்டிபோட, கதையின் போக்கை நகர்த்தக்கூடிய இருக்கும்/இல்லாத ஒரு பொருளோ/விஷயமே மெக்குஃபின் ஆகும்.கதையின் பாத்திரங்கள் அதை சுற்றியே/நாடியே ஓடிக்கொண்டு இருப்பார்கள். உளவாளிகள் பற்றிய படத்தில் அத்தியாவசியமாக இருக்கும் இந்த மெக்குஃபின், ஒரு நாட்டின் ராணுவ ரகசியமாகவோ/அரசாங்க ரகசியமாகவோ , ஒரு சின்ன மைக்ரோ பிலிம்மாகவோ  எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

சமீபத்திய உதாரணம் “தசாவதாரம்” படத்தில் கமல்(கள்) துரத்தும் வயல் (phial).

ஏன், நமக்கு வரும் பரிசு பொருள்கள் கூட ஒரு மெக்குஃபின் தான். உள்ளே இருக்கும் பரிசு பொருளை விட அதை நாம் தபால்காரரிடம்  காத்திருந்து பெற்று, அந்த தபாலை பிரிக்கும் அந்த விறுவிறுப்பும் குறுகுறுப்பும் அந்த பரிசு பொருளை விடவும் அதிகம் தானே?

இனி இந்த யுக்தியை கொண்டு அவர் இயக்கிய திரை வரிசையை பாப்போம்.

PSYCHO (குளித்து விட்டு வந்து பார்க்க)

psycho

ஹிட்ச்காக் இயக்கிய கருப்பு வெள்ளை திரைப்படம்.இந்த படம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது என்றால் அது மிகையில்லை.

அரிசோனா மாகாணத்தில் வாழும் மேரியானுக்கு, (Janet leigh) தன் காதலன் சாமை (John Gavin) மணந்து கொள்வதில் ஒரு பிரச்சனை!  அவனுடைய முன்னால் மனைவிக்கு  திருப்பிதர வேண்டிய கடனும், ஜீவனாம்சமாக பெருந்தொகையும் (நமது நாட்டில் உள்ளதை போல ஐந்நூறு,ஆயிரமல்ல வருமானத்தில் சரி பாதி) கொடுக்க  நிதிநிலை சரியில்லாதது.இதற்க்காக தான் வேலை பார்க்கும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஒரு வாடிக்கையாளருக்கு கொடுக்கவேண்டிய  40,000 டாலரை எடுத்து கொண்டு(திருடிக்கொண்டு) தன் காதலனை தேடி கலிபோர்னியா விரைகிறாள்.

பதட்டத்துடன் செல்லும் அவள் நெடுநேர பயணக்களிப்பில்   நெடுஞ்சாலையிலேயே தூங்கி விடுகிறாள்.  நடு நசியில் தூங்கிக்கொண்டிருப்பவளை ஒரு காவல் அதிகாரி எழுப்பி இவ்வாறு செய்யக்கூடாதென்றும், வழியில் உள்ள ஏதோனும் மோட்டலில் தங்குமாறு அறிவுறுத்துகிறார். பின் அவளது நடவடிக்கை சர்ச்சை அளிக்கவே தொடரவும் செய்கிறார். இதனால் பதட்டமடைந்த மேரியான், இந்த காரை விற்று வேறு புதிய கார் வாங்கி தன் பயணத்தை தொடர்கிறாள். அங்கும் அந்த போலீஸ் அதிகாரி வர, நெடுஞ்சாலையில் இருந்து விலகி வேறொரு பாதையில் செல்கிறாள். அங்கு தனிமையில் ஆள் அரவமற்று, அமானுஷ்யமாக காட்சியளிக்கிற ஒரு வீடும் அதை ஒட்டியே ஒரு மோட்டல் இருப்பதையும் காண்கிறாள். மழை வேறு பெய்து கொண்டு இருப்பதால் வழி இல்லாமல், யோசனைக்கு பின் அங்கு தங்க முடிவெடுக்கிறாள்.

அந்த விடுதியின் முதலாளி நார்மன் (Antony Perkins), அங்கு புதிதாக ஒரு புறவழிச்சாலை போடப்பட்டதால் தன் விடுதிக்கு வாடிக்கையாளர்கள் வருவது கணிசமாக குறைந்து விட்டதாகவும், இங்கு தனது தாயாருடன் வசிப்பதாகவும் கூறுகிறான். வெளியே மழை பெய்து கொண்டு இருப்பதால் தானே இரவு உணவு கொடுப்பதாகவும் வீட்டுக்கு சொல்கிறான்.

அங்கு நார்மனும் அவனது தாயாரும் சண்டையிடுவதையும், அவர் சற்று மனநிலை சரியில்லாதவர் போல கத்துவதும், மேரியான் பற்றி தரகுறைவாக பேசுவதையும் கேட்க நேரிடுகிறது. பின் உணவருந்தும் போது அதை பற்றி விவாதிக்கையில்  பிதற்றிக்கொண்டு இருக்கும் நார்மனின் தாயாரை ஒரு காப்பகத்தில் சேர்க்க அறிவுறுத்துகிறாள். கோபப்பட்ட நார்மன் தனது தாயார்தான் தனக்கு உற்ற  தோழி எனவும், எல்லா ஆண்களுக்கும் இது பொருந்தும் எனக்கூறுகிறான்.

உணவருந்திய பின் தனது அறைக்கு வந்த இரவு உடைக்கு மாறுகிறாள். அவள் ஆடை மாற்றுவதை பக்கத்து அறையின் ஒரு துவாரம் வழியாக நார்மன் பார்க்கிறான். சிறுது நேரத்தில் வீட்டுக்கு சென்று விடுகிறான்.மேரியான் செலவு கணக்கை பார்த்து விட்டு அங்கிருக்கும் ஒரு செய்தித்தாளில் பணத்தை சுற்றி வைத்துவிட்டு பிறகு குளிப்பதற்காக செல்கிறாள்..

மேரியான் குளியல் அறையில் குளித்துக்கொண்டு இருக்கிறாள்.அப்போது திரைசீலைக்கு பின் ஒரு பெண்ணின் உருவம் மெதுவாக கதவை திறந்து உள்ளே வருகிறது. பிறகு கூர்மையான் கத்தியால் பலமுறை பாய்ச்சி கொல்கிறது. திரைசீலையை பிடித்த படி  அங்கேயே விழுந்து மடிகிறாள் மேரியான். சற்றைக்கெல்லாம் நார்மன் தனது தாயாரை கடிந்து கொள்ளும் குரல் கேட்கிறது. வந்து பார்க்கும் நார்மன் அவளது சடலத்தையும், உடமைகளையும் (அறியாமல் பணம் சுற்றி உள்ள செய்தித்தாளையும் சேர்த்து) அப்புறப்படுத்தி ஊருக்கு வெளியே உள்ள ஒரு குளத்தில் காரை தள்ளி விடுகிறான்.

மேரியானின் தங்கை லிலாவும், களவாடிய பணத்தை கைப்பற்ற மேரியானின் முதலாளியால் நியமிக்கபட்ட  துப்பறிவாளர் அர்போகாஸ்டும், மேரியானை விசாரித்து சாமை அடுத்தடுத்து அவனது ஹர்ட்வேர் கடையில் வந்து விசாரிக்கிறார்கள்

ஒரு கட்டத்தில் அர்போகாஸ்ட், நார்மனின் விடுதிக்கு சென்று விசாரணை நடத்துகிறார். அவனது தாயாரையும் பார்த்து சில கேள்விகள் கேட்கவேண்டுமென சொல்கிறார்.ஆனால், தொடர்ந்து மழுப்பும் நார்மனின் பதிலில் திருப்தி அடையாத அவர்.இந்த விஷயத்தை லிலாவுக்கு தொலைபேசியில் சொல்லிவிட்டு, விரைவில் சந்திப்பதாய் சொல்லிவிட்டு நார்மனுக்கு தெரியாமல் அவன் வீட்டுக்குள் நுழைகிறார்.

மாடி படிகளில் மெதுவாக ஏறிகொண்டிருக்கும் போது திடீரென வரும் ஒரு பெண்ணுருவத்தால் கத்தியால் குத்தி கொலை செய்யபடுகிறார். அர்போகாஸ்டை தொடர்ந்து அந்த விடுதியில் லிலா வும் சாமும் கணவன் மனைவி போல் அங்கு தங்குகின்றனர்.

அவர்களும் அந்த பெண்ணுருவத்துக்கு பலி ஆனார்களா? அல்லது கண்டுபிடித்து மர்மத்தை விடுவித்தார்களா ? என்பதை குறுந்தகட்டில் காண்க…

இந்த திரைப்படத்தில் 40,000 டாலர் தான்  மெக்குஃபின்.

மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்த படத்தில் பின்னணி இசையும் (சில நேரங்களில் அமைதியும்) திகிலூட்டுவதாக அமைந்திருக்கும்.

மேலும் இந்த படத்தில் வரும் ஜேனட்டின் குளியலறை கொலை காட்சி. உலக சினிமா வரலாற்றிலேயே மிகவும் முக்கியமான, பிரபலமான காட்சி. இது பிராவோ நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் உலகத்தின் 100 உறைய வைக்கும் சினிமா காட்சிகளின் பட்டியலில் 4 வது இடத்தை பிடித்துள்ளது.

காட்சியின் உக்கிரத்தை கூட்ட, 90 சதவிகித காட்சியையும், ஜேனட்டின் முக பாவங்களையும்,  கத்தியின் வீச்சையும், க்ளோஸ்-அப் ஷாட்களில் வைத்திருக்கிறார் ஹிட்ச்காக்.அவ்வளவு பயங்கரமாக இந்த சீனில் கத்தி ஒருமுறை கூட மேரியானின் உடலில் பாய்வதை போல ஒரு காட்சி இருக்காது.

மொத்தம் 45 வினாடிகளில், 78 விதமான கோணங்களில் (78 seperate piece of films) படமாக்கபட்டு இருக்கிறது.

கீழே குறிப்பிட்டு உள்ளதை போல

shower

தண்ணீரை மேல் நோக்கி நேராக படமாக்க, ஒரு நீளமான லென்ஸ்சை கீழே பொருத்தி, பின் ஷவரின் உள் துளைகளை அடைத்து விட்டு, தண்ணீர் லென்சுக்கு வெளியே விழும் படி எடுத்திருகிறார்கள்.

கத்தி உடலில் பாயும் சத்தத்தை ஒலிப்பதிவு செய்ய பல சோதனைகளுக்கு பிறகு கசாபா எனப்படுகிற பழத்தில் கதியை பாய்ச்சி பதிவு செய்திருக்கிறார்கள்.

ஜேனட் கொலையாகி கீழே விழுந்த பிறகு ரத்தம் (சாக்லேட் சிரப்) தண்ணீரோடு கலந்து சுழற்ச்சியோடு பாத்டப்பின் டிரைன் ஹோல் வழியே வெளியேறுவதை க்ளோஸ் அப்பில் கட்டிய படி அடுத்த சாட் அதே சுழற்ச்சியில் ஜேனட்டின்  குத்திட்ட விழிகளில் இருந்து கேமரா சூம்  அவுட் ஆகும். பார்ப்பதற்கு ஒரு ஸ்டில் போட்டோ சுழல்வதை போல  போல இருக்கும் அந்த காட்சி, ஜேனட்டின் தலையில் இருந்து ஒரு துளி நீர் சொட்டும் போது தான் அது வீடியோ என்பது புலப்படும். அவ்வளவு தத்ருபமான நடிப்பு!

இந்த படம் வெளியான காலகட்டத்தில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்மணிகள், குளிக்கவே பயந்திருக்கிறார்கள். அப்போது ஒரு தந்தையிடம் இருந்து  தனது மகள் குளித்து சில நாட்கள் ஆகிறதென்று எல்லாம் உங்களால் தான் என்று கோபமான கடிதம் வந்திருக்கிறது. குறும்புக்கு பெயர் போன ஹிட்ச்காக் அவருக்கு இப்படி பதிலளித்தார். “முதலில் அவளை உலர் சலவையகத்துக்கு அனுப்புங்கள்” என்று.

த்ரில்லர் பட பிரியர்கள் பார்த்தே ஆக வேண்டிய படம்!

அதாரம்: காண்பனுபவம், இணையம்.

 

விரைவில் எதிர்பாருங்கள்!!!

untitled1

 

 

பின்குறிப்பு/சுய விளம்பரம்:

 

youthful vikatan

‘நகங்களை இழக்க விருப்பமுள்ளவர்களுக்கு! ‘ கட்டுரையை  ‘குட்’ … Blogs பகுதியில் வெளியிட்ட விகடனுக்கு நன்றிகள்!

Advertisements

Read Full Post »

நாம் எல்லோரும் நம் குடும்பத்தோடு சந்தோசமாக இருக்கும் இந்த வேளையில் எத்துனையோ பேர் இந்த பிரபஞ்சத்தில் அனாதையாக ஒரு உறவுக்கு ஏங்கிக்கொண்டு தான் இருப்பார்கள். அப்படி சிறு வயதில் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து அனாதையாக வாழ்ந்து ஒரு கட்டத்தில் தன் குடும்பத்தோடு சேரத் துடிக்கும் ஒரு இளைஞனின் கதை தான் இந்த திரைப்படம்.

சர வெடியுடன் அதிரும் மேளத்துடன் ஆரம்பிக்கிறது கதை. கதையின் நாயகன் ஒரு அநாதை. மார்க்கெட்டில் வொர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறான். எதோ ஒரு அரசியல் காரணத்துக்காக அங்கிருக்கும் கடைகளை மூட சொல்லி ரவுடி கள் சில பேர் பொது மக்களை துன்புறுத்த நமது நாயகன் கடைக்குள் வைத்து பூட்ட படுகிறான். ஆனால் அதிரடியாக கதவை வெல்ட் வைத்து வெளியே வந்து ரவுடிகளை துவம்சம் செய்கிறான். மக்கள் அவனை புகழ. சந்தோஷத்தில் கானம் இசைக்கிறான்.

இந்த கட்டத்தில் நமது கதையின் நாயகியை சந்திக்கிறான். அவர்களது முதல் சந்திப்பு மோதலில் தொடங்க அவளது தந்தையின் முன்னாலேயே அவளுக்கு அறிவுரை கூறுகிறான். பிறகு தொடர்ச்சியாக இருவருக்கும் சந்தர்பமாக மோதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவளின் தந்தை செய்யும் ஒரு சூழ்ச்சியின் மறுமொழியாக ஒரு திருமண நிகழ்ச்சியில் ஊரார் முன்னிலையில் தான் அவளை காதலிப்ப தாக கூறுகிறான். பிறகு நடக்கும் சம்பவங்களில் ஒரு கட்டத்தில் அவனது நல்ல மனது புரிந்து கொள்ள அவளும் அவன் மீது காதல் கொள்கிறாள்.

இவர்களின் காதல் வளர அவள் தந்தையும் இவர்கள் காதலுக்கு சம்மதிக்கிறான்.அவர்கள் தாய் தந்தையரை அழைத்து வர சொல்கிறான். நாயகியும் அவனிடம் தாய் தந்தையரை அழைத்து வருமாறு கூற அவன் தொடர்ச்சியாக மறுக்கிறான். அவளும் ஒரு கட்டத்தில் நீ ஒரு ஆனாதயா என்று கேட்டு விடுகிறாள். இல்லை என மறுக்கும் அவன் தான் ஏன் ஆனதையாக வாழ்கிறான் என்பதை விவரிக்கிறான்.

காட்சி பின்னோக்கி நகர, அவனது சிறு வயதில் தாய் தந்தை அண்ணன் தங்கை அனைவருடனும் சந்தோசமாக வாழ்கிறான், திருவிழாவில் தன் அண்ணன் ஒரு மா பெரும் தவறு செய்கிறான். அதற்காக இவன் தந்தையிடன் ஊரார் முன்னிலையில் அடி வாங்கு கிறான். அவமானம் தாங்க முடியாமல் ஊரை விட்டு ஓடி வருகிறான். நாயகி இவனது கதையை கேட்டு அவனை ஆறுதல் படுத்தி இவ்வளவு நாட்கள் ஆகி விட்டது.இனி அவமானத்தை மறந்து நீ ஊருக்கு போய் தாய் தந்தையரை பார்க்குமாறு கூறுகிறாள்.

சம்மதித்த அவனும் தன் சொந்த ஊருக்கு போகிறான். நேராக வீட்டுக்கு செல்கிறான். ஆனால் அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சொத்துக்களை அபகரித்து கொண்டு, ஒற்றை சொல்லால் தன் தந்தையின் உயிரை பறித்து, மகாலட்சுமியாக பாவிக்க வேண்டிய தன் தாயை மாட்டு கொட்டகையிலும், தன் அன்பு தங்கையை ஊருக்கு ஒதுக்கு புறமாக ஒரு குடிசை வீட்டிலும் கஷ்டப்பட வைத்து இருக்கிறான் தன் அண்ணன் என்பதை தன் நண்பர்களின் மூலம் அறிகிறான்.

தனது சொத்தை திரும்ப அடைந்து தனது தாயையும் தங்கையும் பழைய நிலைக்கு கொண்டு வந்த பிறகுதான் தான் யார் என்பதை அவர்களுக்கு தெரிய வைக்க போவதாக நண்பர்களிடம் சூளுரை க்கிறான். இதில் அவன் வெற்றி அடைந்து மீண்டும் தனது குடும்பத்தோடும் காதலியோடும் இணைகிறனா? என்பது தான் மீதி கதை.

images2005 ஆம் ஆண்டு  வெளியாகி தமிழகம் எங்கும் 100 நாட்களுக்கும் மேலாக ஓடி வெற்றி பெற்ற திரைப்படம் ‘சிவகாசி’. இந்த திரைப்படத்தை எழுதி இயக்கியவர் வெற்றி பட இயக்குனர் பேரரசு. இவர் நாட்டரசன் கோட்டையில் பிறந்தவர். ஊரின் பெயர்களை தனது திரைப்படங்களின் பெயராக வைப்பது தான் இவரது பாணி. cameo roleகளில் (திரை படத்தின் இயக்குனரோ, ஒரு பிரபலமோ ஒரே ஒரு காட்சியில் தோன்றுவது)  நடிப்பதற்கும் இவர் பெயர் போனவர். யாரோ ஹாலிவுட்லில் கூட, ஆல்ப்ரட் ஹிட்ச்காக் க்காம் அவர் கூட இப்படி தான் தோன்றுவாராம்.

நான் பாட்டுல நிம்மதியா இருந்தேங்க. என் பிரண்டு ஒருத்தன் சும்மா எப்ப பாத்தாலும் உலக சினிமா, உலக சினிமான்னு உயிரை எடுப்பாங்க.. நான் அவன் கம்ப்யூட்டர்ல இந்த DVDய போட்டா…அனாவிசியமா என் சிஸ்டத்துல வைரஸ் எத்தற வேல வெசுக்காதேம்பான்.

ஆனா ஊனா மஜித் மஜிதி, இங்க்மெர் பெர்க்மென், விட்டோரியா டெசிகா, கீஸ்லோவெஸ்கி, அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்க்கி, ஸ்டேன்லி குப்ரிக், பெட்ரிகோ ஃபெலினி, ரோமன் போலன்ஸ்கி, வால்டர் செலஸ், பெட்ரோ அல்மதோவர், அகிராகுரசோவா, ரோபெடோ பென்கினி, ஜீன் பியேர் ன்னு வாயில நொலயாத டைரக்டருங்க பேரா சொல்லுவான். அப்பறம் மூச்சுக்கு முன்னூறு தடவ ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்க பத்தி பேசுவான், ரெம்ப நாள் அவரு அவங்க தாத்தான்னே நெனச்சேன். நானும் ஒரு நாள் டென்ஷன் ஆகி சரி ரெண்டு படத்த பாத்தர்ரதுன்னு உக்காந்து பாத்தேங்க…

Ladri di biciclette, (Bicycle theives) அப்படின்னு ஒரு இத்தாலிய படம், ஒரு ஏழையாம், சைக்கிள்ல தொலைச்சிர்றானாம் , அப்பனும் மகனும் பஜார்ல ஒரு நா பூர தேட்றானுகலாம் கடைசில சைக்கிளும் கெடைக்கலையாம் . என்னத்த படம் எடுக்கரானுகளோ…

அப்புறம் Bacheha-Ye aseman (Children of heaven)ன்னு இன்னொரு இரானிய படம், யாருப்பா அந்தாளு ம்ம், மஜித் மஜிதியாம், இந்தாள் பாருங்க எப்படி படம் எடுதிருக்கான்னு, ஏழை குடும்பமாம், அண்ணன், தங்கச்சியாம்.  தங்கச்சி shoe வ தெக்க போன அண்ணன் வார வழில தொலைச்சு புட்றானாம், அப்புறம் அவங்க வீட்டுக்கு  தெரியாம அத அப்புடியே சமாளிச்சு,  ஓட்ட பந்தயத்துல மூணாவது பரிசா ஒரு shoe  தராங்கன்னு சொல்லி பல்ல கடிச்சுகிட்டு 10 கிலோ மீட்டர் ஓடி, தெரியாம் இந்த லூசு பைய முதல் பரிசா வேற வாங்கி… படம் எடுக்க தெரியலேன்னா சும்மா இருக்க வேண்டியது தான…கடுப்புகள கெளப்பிகிட்டு…இவங்களுக்கெல்லாம் படம் எடுக்க காசு குடுகறான் பாருங்க அவங்கள சொல்லணும்..

Read Full Post »

%d bloggers like this: