- தொழில் நுட்ப வளர்ச்சியால் துப்பாக்கிகள் ஆறு முறைக்கு மேல் சுடுவதால், சண்டை காட்சிகளில் சுவாரசியமே போய்விடுகிறது
- ஐஸ்வர்யா ராய் பெயரில் புதிய கொய்யாபழம் வந்து இருக்கிறதாம், ஆனால் தர்க்கப்படி பார்த்தால் அது ஏற்கனவே கொய்யபட்ட ஒரு பழம்தானே
- சிக்கலான தருணங்களில் என் மனைவி என்ன நினைக்கிறார் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிந்து கொள்ள முடியுமா? #முடியல எசமான்
- கல்வி கூடங்களை எல்லாம் திறந்தவர் காமராஜர்தான் என்று கேள்விப்பட்டதும் நீண்ட காலம் அவர் மேல் கடுப்பில் இருந்தேன்
#WhenIWasAKid - ஞாயிறு காணமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு வந்ததும் முகமெல்லாம் இருண்டு போகும், காலையில் பள்ளிக்கூடம் போக வேண்டுமே
#WhenIWasAKid - பேருந்தில் இடமில்லாமல் நின்று கொண்டிருந்த என்னை ஒரு கல்லூரி மாணவி சைகை செய்து சடாரென மடியில் அமர்த்திக்கொண்டாள்
#WhenIWasAKid - வகுப்பில் பசங்க யாரவது பேசினால் இரண்டு பெண்களுக்கு நடுவே உட்கார வைத்து விடுவார்கள், நான் அடிக்கடி பேசுவேன்
#WhenIWasaKid - 32 ஆண்டுகளாக எழுத்தை தவமாக கொண்ட சாருவே அண்மையில்தான் ஆவியில் இயங்கியசூழலில் 4வதுமுறை என் எழுத்துகளை வெளியிட்ட விகடனுக்கு நன்றி #குசும்பு
- பேருந்து நிறுத்தத்தில் ஒரு அழகிய நங்கை சிரித்தாள், சில்லறை சிதறியது போல் இருந்தது. கைப்பையில் ஓட்டைபோலும் சிதறியதை பொறுக்கி கொண்டாள்
- ஒத்து கொள்கிறேன், நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது, அது நமது செயல்களை எல்லாம் கண்காணிக்கின்றது! #கண்காணிப்புகேமரா
- தன் வாழ்க்கையை படமாக்கும் ஷகிலா! :: பிட்டு பிட்டா ஓட்டுவாங்களா இல்ல முழு நீல திரைப்படமா ? #டவுட்டு
- சொத்து கணக்கை வெளியிட்டார் முதல்வர் கருணாநிதி#JokeOfTheDecade
- நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு பதில் “Please sit down” “பைட்டியே” என்று பதிவு செய்த ஒலிநாடாக்களை பயன்படுத்தினால் என்ன?
- ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிங்களுக்கு கொண்டாட்டம்,ஆனா கூத்தாடிங்களே ரெண்டுபட்டு நிக்கறோம் #ஷண்முகசுந்தரம் #கரகாட்டகாரன் #விஜயகுமார்குடும்பம்
- கலைதிருட்டை ஒப்புக்கொண்டதை பூடகமாக பார்வையாளனுக்கு உணர்த்தவே படம் நெடுகிலும் கதாபாத்திரங்கள் தலைகுனிந்து நிற்கின்றனவோ? #குறியீடு #நந்தலாலா
- பண்ணையார் மோட்டார் ரூம்ல வெச்சு கெடுக்கறதெல்லாம் சுத்த பொய்.நம்மள நல்ல ஏமாத்தியிருக்கானுக என கொந்தளிக்கிறான் புதிதாய் மணமான என் நண்பன்;) 18+
- உடல் பயிற்சி செய்யாமல் எடையை குறைக்க வேண்டுமா? ஐந்து நாள் காய்ச்சலில் விழுந்து கஞ்சி குடித்தால் இது சாத்தியமாகிறது
- ஒட்டு கேட்பது ஆனந்தம் என்றால் பிரபலங்களின் உரையாடல்களை ஒட்டுகேட்பதேன்பது பரமானந்தம் #நிராராடியா #ஒலிநாடாக்கள்
- தொந்தரவு செய்துகொண்டே இருந்தான்,உறக்கமிழந்தேன், நிம்மதியிழந்தேன்.தனிமையில் அகப்பட்டான் ரத்தம் சுவற்றில் தெறிக்க கொலைசெய்தேன்#மூட்டைபூச்சி
- பயணங்களின் போது கெட்போனில் காதல் இசை காதுகளில் வழிய சமயங்களில் இசைக்கேற்ப அழகான மான்டேஜ் காட்சிகள் விரிவதை கவனித்து இருக்கிறீர்களா?
- நானொன்றும் ஆணாதிக்கவாதி இல்லை, எனது வேலைகளை நானே செய்து கொள்கிறேன். மனைவி ஊரில் இல்லாத போது
- புத்தக சந்தைக்கு போகலாமென்றால் பரணில் இருக்கும் பல புத்தகங்கள் என்னை பார்த்து பரிகாசிப்பது போல ஒரு உணர்வு
- பின்நவீனத்துவமும் நவீனத்துவமும் பிரியும் புள்ளியை பற்றி மனைவியிடம் விளக்கிக்கொண்டு இருந்தேன்,எந்த புள்ளியில் உறங்கிபோனாளோ கவனிக்கவில்லை
- முடவர்களின் துணையோடு மாட்டுவண்டியில் நிலவுக்கு பயணம் செய்ய வேண்டுமென்றார் மேலாளர்.முடியாததென்றேன். உன் மனப்பாங்கில் குறை உள்ளதென்கிறார்/1
- பாதி வழியில் மாட்டு வண்டியில் பெட்ரோல் தீர்ந்து விட்டதென்றேன், செயின் கழண்டு விட்டதென்றேன்; பிரமாதம் தொடர்ந்து செல்லுங்கலென்றார்
/2 - தனுஷ் ட்ரைலரில் சொல்வதை பார்த்தால் தமிழ்நாட்டில் மாப்பிள்ளைகளை விட ஆம்பளைங்களுக்கு பெரும் தட்டுபாடா இருக்கும் போலேயே
- புரட்சி தலைவர் எம்.சி.ஆரை திமுகாவில் இருந்து விலக்கியதை கண்டித்து அண்ணா அறிவாலயத்தின் முன் திரு.தங்கபாலு நாளை ஆர்ப்பாட்டம்
#கப்சா - வருசத்துக்கு ஒரு தடவ வந்தாதான் அது நமக்கு தீபாவளி, வருஷம் பூரா வந்தா அதுவே தலைவலி #IPL-4
- ரசினிக்கே மூச்சிரைத்த போது தமிழக மக்கள் சுவாசித்து கொண்டு இருந்தது இன்னும் நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கிறது
#ரசினிபாறைகள்
Advertisement

வருகைக்கு நன்றி அப்துல்லா
உங்களின் பிறந்த தேதியை பற்றிய தகவலை தேடினேன் கிடைக்கவில்லை.இருந்தாலும் உங்களுக்கு பிறந்தநாளில் உங்களை வாழ்த்துவதில் உங்களை விட நான்தான் அதிக மகிழ்ச்சியடைகிறேன்.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே!
முகமறியா நண்பர்களும் அன்போடு வாழ்த்துவது என்னை நெகிழச்செய்கின்றன! மிக்க நன்றி தோழர்!