ட்விட்டரில் என் எண்ணங்கள்
- பொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பெயர் சுருக்கம் பெற்று இன்று முதல் @balavin_tweets, @Piliral ஆகா மாற்றப்படுகிறது. ஆதரவை தொடரவும்
- ஷாப்பிங் போகலாம் என்றாள், சலித்தேன்.கேசரியில் உப்பு கரித்தது; சிரித்தேன், புளி சாதத்திலேயே முந்திரி பருப்பை கண்டேன்
- மனைவி பச்சரிசி வாங்கி வரச்சொன்னாள். வாங்கி வந்தேன், வெள்ளையாக இருந்தது
- வீட்டுல காப்பி ஆறி போனா ஆத்திரப்படும் அன்பர்கள் காப்பி டே சென்று கோல்ட் காப்பி சாப்பிட கடவது #ஒருமனைவியின்சாபம்
- Somehow I feel the “Snooze” in the Alarm is the greatest invention of this century #thoughtoftheday
- ஊசிய பாத்து சல்லடை சொல்லுச்சாம் உனக்கொரு ஓட்டை இருக்குன்னு!
- What is the landmark for LANDMARK shop?
- ஏன் சன் மியூசிக் தொகுப்பாளர்கள் அனைவரும் பொங்கல் சாப்ட மாதிரியே பேசறாங்க. லேகா வாஷிங்டன் மாதிரி ஒரு தொகுப்பாளினி வரவே மாட்டாங்களா?
- http://tinyurl.com/3yvor9t – தேனில்-ஊறவிட்ட-பலா குரலில் கரைந்து கொண்டு இருக்கேன். #ஸ்வர்ணாநேரம்
- http://tinyurl.com/ygsm25j,http://tinyurl.com/yfg5oww,http://tinyurl.com/ygxt7mz – Recent unnoticed melodies
- அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு #உலகின்முதல்ட்வீட்
- சிங்கபூர் மணி vs ஜெர்மனி பால்; அட பதறுகளா. உடனடியாக குடியரசு கட்டுரைகளை ஆங்கிலத்துல மொழி பெயர்கணும். #பெரியாரின்அவசியம்தேவை
- http://tinyurl.com/2fncrxj – My version of variya dance performance in UK
Original version -http://tinyurl.com/2ehqx9u
)))
- எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை தன் திருமணத்தன்று தாகசாந்தி செய்ய மறுக்கும் நண்பனுக்கு #புதுக்குறள்
- பொண்ணு கெடச்சாலும் புதன் கெடைக்காதுன்னு யாரவது சொன்னாலே கொலை வெறியாகிறான் திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் என் நண்பன்
- இந்த காந்த குரலால் குளிர்ப்ரதேசத்திலும் பல முறை கரைந்தோடி இருக்கிறேன். என் விருப்பமான தொகுப்பு-http://tinyurl.com/3xny2pk #ஸ்வர்ணாநேரம்
- ஸ்வர்ணலதாவின் இசை தொகுப்பு தயார் – http://goo.gl/e7Ht
- Dedicating my all time favorite swarnalatha’s collection -http://www.youtube.com/view_play_list?p=2813C31C7A6D8A4F#swarnalatha
-
தும்பை பூத்த பாதை,தேவதாஸைக் காதலிப்பவர்கள்,கனவின் மிச்சம்,கதைகளைத் தின்னும் ஆடு.ஏன் எஸ்ரா பத்தியின் தலைப்புகள் எல்லாமே ஒரு சைசாவே இருக்கு
- தேடித்தேடி 12 பாடல் பதிவு செய்து கேட்ட சுகம்,விரல் சொடுக்கில் இன்று நினைத்த பாடல் பாடும் போது ஏனோ இல்லை. தேடலில் தான் சுகமுள்ளது போலும்!
- அரசியல் கட்சிகளின் ஆர்பாட்டங்களை எதிர்த்து யாரவது ஆர்பாட்டம் நடத்துவார்களா? #இது தேர்தல் வரும் பருவம்
- ஸ்விஸ் பாங்கில் முடங்கி கிடக்கும் பணத்திற்கும் ஏழுமலையான் கோவிலில் முடங்கி கிடக்கும் நகைகளுக்கும் என்ன வித்யாசம்? #டவுட்டு
- நான் வாழ்வில் உருப்படவே மாட்டேன் என்று வாழ்த்திய பொறியியல் கல்லூரி ஆசிரிய ஆசிரியைகளுக்கு என் பணிவான நன்றிகள்! #ஆசிரியர்தினம்
- Black day!! My most favorite singer has passed away. you are unique and nobody else can replace you.Rest in peace#Swarnalatha
- பேச்சுகளின் ஊடே துச்சமெனக்கருதப்படும் தலைமயிருக்கு, முடி உதிர்வதை தடுக்கும் விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகமாய் இருக்கிறதே எப்படி? #நகைமுரண்
- அம்மாவை மாமா எனவும், அப்பாவை பாப்பா எனவும் அழைக்கிறது என் நண்பனின் NRI குழந்தை
#mamasandpapas
- சுவாமிஜிகளின் எண்ணிக்கை அதிகமாயிட்டு வர்றத பாத்தா…. கடவுளை மாற மனிதனை நினைன்னு சொன்னத ஒரு வேளை ஜனங்க தப்பா புரிஞ்சிகிட்டாங்களோ?
- கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் – பழமொழி தீர்ப்புக்கு முன்பா? பின்பா?
- அயோத்தியில் சர்ச்சுக்கு உரிய இடத்தில் ஏன் இவுங்கெல்லாம் சண்டை போடறாங்க
- பேருலயே “ஐயோ தீ” இருக்கறதாலதான் இவளோ பிரச்னையோ
#அயோத்தி
- சுதந்திரம் பெற்று தந்தவர் பிறந்த இந்நன்னாளில் மதுசூழ் வாழ்கையை அனுபவிக்க சுதந்திரமில்லாமல் போனது
#டாஸ்மாக் #லாக்ஜி
- சூட்சமபடிமானங்களை நினைவுகளின் புதர்சரிவிலிருந்து மீட்டெடுப்பது இயலாதபோது முயலாமல் போவதென்பது அதன் சமன்பாடுகளை தகர்ப்பதை போலாகுமென்பதுவிதி
- முதலில் ஜவுளி, நகைக்கடை விளம்பரங்களை தடை செய்ய வேண்டும், கத்தி முனையில் நடப்பதை போல ஒரு வாழ்கை
- நம்பிக்கை அதானே எல்லாம் – கல்யாண் ஜ்வல்லர்ஸ்; நம்பி கடன் கேட்ட குடுப்பாங்களா பிரபு சார்?
- கே.பியோட லெட்டர் பேட் தொலஞ்சு போய் ஒரு வருசமாச்சாமே? பஸ் ஸ்டாண்ட்ல பேசிக்கிட்டாங்க #குசும்பு
- நாசிகளின் நுழைகளின் ஊடே ஊற்றுக்கண் ஊறி பெருக்கெடுத்தோடி தேக செயல்பாடுகளை செயலர செய்து ஆற்றமையால் பெருந்துயர் கொள்கிறேன் #இலக்கியஜலதோஷம்
- இரு கோடுகள் தத்துவத்திற்கு உதாரண புருஷர்களாய் நம் இருகழகங்கள். அன்றும், இன்றும் என்றென்றும் #திமுக #அதிமுக
- A bike is having ‘Anjaanenjan’ written in front number plate n #Azhagiri‘s photo in rear without having any traces of reg.no #Madurai rocks
Advertisement

சூப்பர் !
ஸ்வர்ணலதா பாடல்கள் டிவிட் மிஸ்ஸாகிடுச்சே !
சேத்துருவோம் தல